கொரோனவால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா குடும்பம் – முன்னாள் காதலர் விவேக் ஓபராய் செய்த ட்வீட்.

0
2160
vivekoberai
- Advertisement -

இந்தி சினிமா துறையில் நட்சத்திர தம்பதியர்களாக இருந்து வருகின்றனர் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதியினர். ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் போன்றவர்களை காதலித்து பிரிந்து விட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலர் நடிகர் விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராய் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அமிதாப் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அமிதாப் குடும்பத்தில் உள்ள, அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

- Advertisement -

சமீபத்தில் அதன் முடிவு வெளியான நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அமிதாப் பச்சன் குடும்பத்தில் ஜெயபச்சனை தவிர மற்ற அனைவர்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்த ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், இந்த குடும்பம் விரைவில் குணமடைய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் விவேக் ஓபராய். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், முன்னாள் காதலி மீது இன்னும் அக்கறையா என்று கமன்ட் அடித்து வருகின்றனர். மேலும், உண்மை காதலுக்கு என்றும் முடிவில்லை என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement