பிரசவிப்பதை நேரில் பார்த்தா குழந்தையே பெத்துக்க தோணாது. அப்ப நீ சும்மா தான் இருந்தியா?- விவேக்கை கடுமையாக சாடும் நெட்டிசன்கள்.

0
1438
vivek
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மின்னலை விட வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் பரவல் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடு இல்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. மேலும், தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 6948 பேர் கொரோனா தொற்றால் இறந்து உள்ளார்கள். தமிழகத்தில் மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நாடு முழுவுதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் கொரோனா போன்ற வைரஸ் பரவுவதற்கு காரணம் அசைவம் சாப்பிடுவது தான் என்று விவேக் கூறியுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர்.

நடிகர் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் பற்றி அக்கறை கொண்ட மனிதராக திகழ்ந்து வரும் விவேக், நாட்டு நடப்பு, சினிமா என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். இந்த நிலையில் ட்விட்டரில் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆயினும் உயிர்ப்பலி போன்ற சடங்குகளில் நம்பிக்கை இல்லை என்று பதிவிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர், கிடா வெட்டுறது சாப்பிறதுக்கு தான அது சடங்கு இல்லயே என்று பதில் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதில் அளித்த விவேக், கிடா வெட்டுவதை நேரில் பார்த்தால் அதன் பிறகு அதை சாப்பிடத் தோன்றாது. எல்லாம் அவரவர் மனப்பக்குவம்; வளர்ந்த சூழல். புதிய புதிய வைரசுகளைப் பார்க்கும் போது எதிர்காலம் சைவ உணவில் சென்று முடியலாம் என்று கூறியிருந்தார்.

விவேக்கின் இந்த கடுத்து பல அசைவ விரும்பிகளை சீண்டியுள்ளது. இதனால் விவேக்கின் இந்த கருத்திற்கு பதில் அளித்த நெட்டிசன்கள், கதிர் அறுப்பதை நேரில் பார்த்தால் சோறு சாப்பிடவே கஷ்டமாக இருக்கும். எல்லாம் அவரவர் மனப்பக்குவம். வளர்ந்த சூழல். புதிய புதிய வைரஸ்களை பார்க்கும் போது வரும் காலங்களில் உடலை பாதுகாக்க அசைவ உணவே சரியானது என்று முடிவுக்கு வருவார்கள் என்றும்

மற்றொரு ட்விட்டர் வாசி, அடேய் லூசு பெண்கள் பிரசவிப்பதை நேரில் பார்த்தா குழந்தையே பெத்துக்க தோணாது. அப்ப நீ சும்மா தான் இருந்தியா? புள்ள பெக்கல? வந்தமா நாலு மொக்க காமெடி பண்ணுனமா னு இருக்கனும் இந்த அறிவுரை மயிரு சொல்லற வேல எங்க கிட்ட வேணாம். நாங்க மாசம் நாலு கெட வெட்டி திங்கும் பயக என்றும் விவேக்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement