இன்னோருவாட்டி இப்படி பண்ணா ஒன்னு கன்னத்துல ஒன்னு கொடுப்பேன் இல்லனா – கூல் சுரேஷ்ஷை எச்சரித்த ஐஸ்வர்யா.

0
1402
Aiswarya
- Advertisement -

கூல் சுரேஷ் குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா கூறி இருக்கும் விஷயம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. வெந்து தணிந்தது காடு மற்றும் எஸ்டிஆரின் பத்து தல படத்தின் என்ற வசனம் மூலம் பிரபலமான கூல் சுரேஷ். இவர் படம் முடிந்த பிறகு வந்து ரீவிவ் சொல்லுவார். இதற்காகவே பலரும் காத்துக்கொண்டிருப்பார்சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மன்சூர் அலிகான் பட விழாவில் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் எல்லை மீறி இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூல் சுரேஷும் கலந்துகொண்டார். இந்த விழாவில் கூல் சுரேஷ் பேசும் போது ‘ மேடையில் அனைவருக்கும் மாலை போடீர்கள் ஒருத்தருக்கு மாலை போட்டீர்களா என்று அருகில் இருந்த தொகுப்பாளினி மீது சட்டென மாலையை போட்டார் இதனை சற்றும் எதிர்பாராத அந்த தொகுப்பாளனை கூல் சுரேஷ் மாலை போட்டதுமே அதனை கழட்டி எறிந்து விட்டு முகம் சுளித்தார்.

- Advertisement -

இந்த செயலைக் கண்டு அரங்கில் இருந்து அனைவருமே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார்கள்.மேலும் மேடையில் அமர்ந்திருந்த மன்சூர் அலிகான் ‘ டேய் இதெல்லாம் தப்புடா இப்படி எல்லாம் பண்ணக் கூடாது ‘ என்று பேசினார். இந்த விவகாரத்தை தொடர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ் நடிச்சுதான் என்னால பெரியா ஆளா வர முடியலை. அதனால ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளைச் செஞ்சு என் பிழைப்பை ஓட்டிட்டிருக்கேன்.

நான் பண்றது எல்லாமே ஃபன்னுக்குதான். அப்படி விளையாட்டா செஞ்சதுதான் இதுவும். ஆனா ஒரு பெண்ணின் மனசைக் காயப்படுத்திடுச்சுன்னு நினைக்கிறப்ப உண்மையிலேயே வருத்தப்படுறேன்’ என வீடியோவில் பேசியிருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள தொகுப்பாளினி ஐஸ்வர்யா ‘ அதை நினைத்தால் இன்னும் எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

-விளம்பரம்-

என் தோள்பட்டையை பலவந்தமாக அழுத்தி திடீரென்று அப்படி நடந்து கொண்டார் புது மேடையில் யாராவது இப்படி திடீரென்று நடந்தால் நம்மால் என்ன செய்ய முடியும் அந்த ஆள் கன்னத்தில் பளார் என்று ஒரு அடியாவது கொடுக்காமல் விட்டோமே என்று இப்போது நினைக்கிறேன். கிறுக்குத்தனத்திற்கு கொஞ்சம் எல்லைகள் இருக்கிறது தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காத படி இருக்க வேண்டும். இதற்கு முன்னால் கூட ஒரு நிகழ்ச்சியில் என்னிடம் வம்பு பண்ணினார்.

பொதுவாகவே இவருடைய நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காது அதனால் அவரை மேடையில் அழைக்கும் போது கூட வெறும் நடிகர் போல் சுரேஷ் என்றுதான் கூப்பிடுவேன் ஆனால் அவர் எனக்கு யூடியூப் ஸ்டார் என்று பட்டம் இருக்கிறது அதைச் சொல்லி கூப்பிட மாட்டீர்களா என்று கேட்டார் அதனால் தான் இந்த முறை என் கழுத்தில் வேண்டும் என்று மாலை போட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது இன்னொரு முறை இதுபோல நடந்தால் ஒன்று கன்னத்தில் ஒரு அடியாவது கொடுப்பேன் இல்லாவிட்டால் போலீசில் புகார் அளித்து விடுவேன்என்று கூறியுள்ளார்.

Advertisement