சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் என முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினி தான் மீடியாவுக்குள் நுழைந்தார்அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது மிகப்பெரிய ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று.
சித்ரா தற்கொலை :
இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.
கணவர் கைது :
அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் காரணம் அவர் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இரண்டாவது நினைவு ஆண்டு :
இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி விஜே சித்ராவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் அவரது அம்மா சித்ராவின் “சித்தது லீவிஸ் ஆன்” என்ற சேனலில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சித்ரா மறைந்து 2 வருடங்கள் ஆகி விட்டது ஆனால் நம்முடைய கேள்விக்கு இன்னனும் பதில் கிடைக்கவில்லை. நான் உங்ககளுடன் பேசவேண்டும் என்று வெகு நாட்களாக இருந்தேன் ஆனால் துக்கம் என்னை பேச விடவில்லை. விளையாட்டாக இருந்த பிள்ளை விளையாட்டாகவே சென்று விட்டது.
அன்னதானம் :
ஆனால் சித்ராவுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க நீங்கள் எல்லோரும் பிராத்திக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை என்று அவர் அந்த சேனலில் உருக்கமாக வீடியோ பதிவு ஓன்று வெளியிட்டிருந்தார் விஜே சித்ராவுடைய தாயார். மேலும் விஜே சித்தராவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் “கரங்கள் காக்கும் முதியயோர் இல்லத்தில் ஆனாதானம் வழங்கினார்கள் சித்ராவின் குடும்பத்தினர். இந்த வீடியோ வைரலாககே அவருடைய ரசிகர்கள் பலரும் சித்ராவின் குடும்பத்திற்கு தங்களுடைய ஆறுதலை கூறி வறுகின்றனர்.