அன்னிக்கி சித்ரா சந்தோசமாக தான் இருந்தார் – CCTV ஆதாரத்தை வெளியிட்ட ஹேம்நாத்தின் தந்தை.

0
2109
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

அதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : அந்த காட்சி வேணான்னு சொன்ன – அவங்க கேக்கல. சித்ராவின் தாயார் கண்ணீர் பேட்டி.

- Advertisement -

தனது மகன் கைது செய்யப்பட்ட பின்னர் பேட்டி அளித்த ஹேமந்த்தின் தந்தை, தன் மகன் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்தார்கள் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் புகார் மனு கொடுத்துள்ளார். புகார் கொடுத்துவிட்டு பத்திரிகையாளர்கள் சந்தியில் பேசிய ரவிச்சந்திரன், சித்ராவின் மரணத்தை தன் மகன் மீது குற்றம் சாட்டுகிறார்கள் சித்ரா செல்போனை ஆய்வு செய்தால் இதற்கான உண்மைகள் கிடைத்துவிடும் சித்ரா இறப்பதற்கு முன்னதாக வரை இரு குடும்பமும் நன்றாக தான் பேசிக்கொண்டு இருந்தோம்.

சித்ரா தற்கொலை..; வேறு காரணம் இருந்திருக்கலாம் - ஹேம்நாத் தந்தை  ரவிச்சந்திரன் - Tamil News | Tamil Online News | Tamil Trending News |  Tamilexpressnews.com

சித்ரா தான் திருமணத்திற்கு முன்னதாக பதிவு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அதேபோல திருமணத்திற்காக தங்கள் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மட்டும்தான் கொடுக்க முடியும் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு நாங்களும் ஒப்புக் கொண்டோம். மேலும், திருமண மண்டபம் பார்ப்பதற்கு இரு குடும்பத்தாரும் ஒன்றாகத்தான் சென்றோம். அங்கே சித்ரா சந்தோஷமாகத் தான் இருந்தார். சித்ரா இறந்த ஒரு நாள் முன்பு தான் அதாவது மாலைதான் நாங்கள் மண்டபத்திற்கு சென்றோம். அதனுடைய சிசிடிவி காட்சிகளை புகைப்படங்கள்தான் எவை என்று சில புகைப்படங்களையும் காண்பித்தார் ரவிச்சந்திரன்.

-விளம்பரம்-
Advertisement