அந்த காட்சி வேணான்னு சொன்ன – அவங்க கேக்கல. சித்ராவின் தாயார் கண்ணீர் பேட்டி.

0
32967
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

அதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

- Advertisement -

த்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் சித்ராவின் மரணத்திற்குப் பின்னர் முதன்முறையாக சித்ராவின் பெற்றோர்கள் பேட்டி அளித்து இருக்கிறார்கள் அந்த பேட்டியில் பேசியுள்ள அவர்கள் சித்ராவின் மரணம் தற்கொலையே கிடையாது அவன்தான் அடித்து கொலை செய்து இருக்கிறான் என்று கூறினார்கள் மேலும் ஊடகங்களில் வெளியாவதை போல சித்ராவிற்கு எந்த ஒரு அரசியல் பிரபலங்களும் தொடர்பு கிடையாது அவர் சம்பாதித்த பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து வைத்து நாங்கள் அனைத்தையும் முன்தினம் என்று கூறியிருக்கிறார்கள்.

வீடியோவில் 23 நிமிடத்தில் பார்க்கவும்

அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸில் குமாரனுடன் நெருக்கமாக சித்ரா நடித்தது ஹேம்நாத்திற்கு பிடிக்கவில்லை இதனால் அவன் தொடர்ந்து சித்ராவை நச்சரித்து வந்ததாக கூறியுள்ள சித்ராவின் தாயார், மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை எழுதும் அந்த மேடம் இடமும் நான் போன் செய்து இது போல பிரச்சனை எல்லாம் இருக்கிறது நிச்சயதார்த்தம் வேறு முடிந்துவிட்டது எனவே கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகளை தவிர்த்து விடுங்கள் என்று கூறினேன். ஆனால், அவர்களும் சரி அம்மா நான் பிறகு பேசுகிறேன் என்று போனை வைத்து விட்டார்கள். அதன் பின்னர் அவனிடம் எதையும் சொன்னேன் அவர்கள் கேட்கவில்லை என்று ஆனால் அவர் இறுதிவரை இதிலேயே தான் இருந்தார். இந்த விஷயத்தில்தான் அவர்கள் இருவருக்கும் சண்டை வந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement