உங்க குடும்பத்த அழைத்து வாங்க – அம்மாவே பார்க்க ஆசைபட்டுள்ள இந்த மாஸ்டர் பட நடிகை யாருனு தெரியுமா ?

0
1011
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடுன பாட்டு’னு சொல்லிட்டு பாடுங்க’னு தான் கேக்குறோம் – உணமையான கர்ணன் உருக்கமான பேட்டி.

- Advertisement -

சமீப வருடங்களாக இவரை விஜய் டிவியில் காண முடிவதில்லை, இதுகுறித்து சமீபத்தில் தெரிவித்த ரம்யா, அதைப்பற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை. நான் விஜய் டிவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்னால் நான் பண்ணாத ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி மூலம் மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் சிறு வயதில் ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா, ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து பேசுகையில், என்னுடைய அப்பா தமிழ் நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனரல். அவர் ஒய்வு பெரும் போது அவரிடம் ஜெயலலிதா அம்மா, உங்களுடைய குடும்பத்தை எப்போது காட்டுவீர்கள் என்று கேட்டார். அதன்பின்னர் என் தந்தை என்னை அழைத்துச் சென்றார் அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அவர் என்னை மடியில் அமர்த்திக்கொண்டு எனக்கு காபி கொடுத்தார் மேலும் எனக்கு எதில் ஆர்வம், வளர்ந்ததும் என்னவாக வருவீர்கள் என்றெல்லாம் கேட்டார். ஒரு அரைமணிநேரம் வந்து சந்தித்து இருந்தது, அது தற்போது வரை நான் நினைவில் வைத்திருக்கும் ஒரு அழகான தருணம். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து நான் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த போது அவரை சந்தித்தேன். ஆனால், அப்போது அவரிடம் பேச முடியவில்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement