முத்து பட வடிவேலு ! பாகுபலி பிரபாஸ் ! தலையில் விக் ! சரவணன் மீனாட்சி ரியோவை கலாய்த்த நெட்டிசன்

0
9800
Actress-Rio-Raj (
- Advertisement -

சரவணன் மீனாட்சி’ சீரியலை வைத்து எக்கச்சக்கமான ட்ரோல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சீரியல் பற்றிய ரெவியூவைவிட, மீம்களே அதிகம் பகிரப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது சரவணன் மீனாட்சி சீரியல். பாகுபலியாக கெத்து காட்டிக் கொண்டிருக்கும் ரியோவிடம் பேசினோம்

-விளம்பரம்-

rio

- Advertisement -

சரவணன் மீனாட்சி’ சீரியல்ல பாகுபலி-அனுஷ்கா எல்லாம் ஓவரா இருக்கே?
(சத்தமாகச் சிரிப்பவர்) நல்லா போய்கிட்டு இருந்த சீரியலில் இதை மாதிரி சில ட்விஸ்ட் வரப் போகுதுங்குற விஷயம் எனக்கே திடீர்னு தான் தெரிஞ்சது. என் தலையில் விக் வைச்சப்போ, பார்க்குறதுக்கு அப்படியே ‘முத்து’ படத்துல வர்ற வடிவேலு மாதிரியே இருக்கேன்னு நானே ஒப்பனா செட்டுல உள்ள அத்தனை பேர் கிட்டேயும் சொன்னேன். நான் நினைச்சதை புள்ளைங்க அப்படியே மீம்ஸ் போட்டுட்டாங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு பாஸ். ரியோ இதையெல்லாம் சும்மா ஜாலியா கடப்பான்.

பாகுபலி படத்தோட உங்க சீரியலை கம்பேர் பண்றாங்களே..?

-விளம்பரம்-

“அட நாங்களே அந்தப் படம் அளவுக்கு எல்லாம் ஃபீல் பண்ணி பண்ணலைங்க. சும்மா இருக்குற சங்கை ஊதி கெடுக்குற மாதிரி இவங்களே உசுப்பேத்தி ரணகளம் பண்ணிட்டாங்க. சத்தியமா பாகுபலி அளவுக்குலாம் சீரியல் இல்லீங்க.

memes

உங்களைப் பத்தி வந்த மீம்ஸை நீங்க ஷேர் பண்ணியிருந்தீங்களே?”

“ `அட ஆமாங்க.. சீரியல் பத்தி வந்த மீம்ஸை, குறிப்பா நான் இருந்த மீம்ஸ்களை எல்லாம் அப்படியே எங்க டைரக்டர் கிட்ட காட்டி, சார் என் மனசுல உள்ளதை அப்படியே மீம்ஸ் ஆக்கியிருக்காங்க’னு சொன்னேன். அதனாலதான் என் இன்ஸ்டாகிராம்ல அந்த மீம்களை ரசிச்சு ஷேர் பண்ணியிருதேன்.” என் மனசுல இருந்ததை அப்படியே மீமாக்கி இருந்தாங்க. அதனாலதான் ஷேர் பண்ணியிருந்தேன்.”

“இதனால உங்க இமேஜ் பாதிக்கப்படுமே..?”

அப்படியெல்லாம் நான் நினைக்கல. சன் மியூசிக் விஜேவா இருந்தப்போ என்னுடைய ஆடியன்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தான். அதுனால அவங்களுக்கு ஏத்த மாதிரி ஹாப்பியா கலாய்ச்சு ஷோ பண்ணிட்டிருந்தேன். இப்போ விஜய் டிவி சீரியலை குடும்பங்கள் பார்க்குறாங்க.

rio memes

சீரியல் ஷூட்டிங் பழனில நடந்துட்டு இருக்கு. நிறைய குடும்பத்தலைவிகள் என்னை `சரவணன்’ கதாபாத்திரமாதான் பார்த்து என்கிட்ட பேசுறாங்க. ஒருசில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. அதுக்காக மொத்தமா எல்லோருக்கும் பிடிக்கலைன்னு சொல்லிட முடியாதுல்ல…

rio raj

வெள்ளித்திரையில் உங்களை எப்போ பார்க்கலாம்..?”

“இப்போ கொஞ்சம் சீரியஸா கதை கேட்க ஆரம்பிச்சிருக்கேன். ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா, ஒரு கதையை ஓகே பண்ணி ஹோல்டு பண்ணி வைச்சிருக்கேன். சீரியல் முடியுறதுக்காக வெயிட்டிங்.’

Advertisement