‘மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி’ – சஸ்பென்ஸை உடைத்த சிவர்கார்த்திகேயன்.

0
1696
Sivakarthikeyan
- Advertisement -

எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:

மேலும், டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த பிரின்ஸ் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது.

ட்ரைலரில் இடம்பெற்ற சஸ்பென்ஸ் :

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை நடைபெற்றது. மாவீரன்’ படத்தில் சஸ்பென்ஸான விஷயம் படக்குழுவினர் சீக்ரெட்டாக வைத்திருந்தனர். அது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘மாவீரன்’ டிரெய்லரில், அரசியல்வாதிகளை பார்த்து பயப்படும் சிவகார்த்திகேயன், அடிக்கடி வானத்தை பார்ப்பார். அப்போது அங்கிருந்து ஒரு குரல் கேட்கிறது. அந்த குரலை கொடுத்தது ஒரு முன்னணி நடிகருடையது என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி குரல் :

மேலும், அந்த குரல் யாருடையதாக இருக்கும் என்றும் ரஜினி, கமல், விஜய் சேதுபதி என்று பலரின் பெயரை எல்லாம் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி அந்த சஸ்பென்ஸ்ஸை இப்போதே உடைத்துள்ளார்கள். அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் :

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி வீரமே ஜெயம் என்று பேசும் வசனம் இடம் பெற்ற வீடியோவை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவை தன்னுடையட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் அன்புள்ள விஜய் சேதுபதி உங்களின் இந்த கணிவான செயலுக்கு மிக்க நன்றி மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement