சண்டை காட்சிகளில் டூப் எதுவும் இல்லாமல் நடித்து அசத்தும் கமல்ஹாசன். அறிய வீடியோ இதோ.

0
2664
kamal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் நடிகர் கமலஹாசன். இவர் சினிமா துறையில் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியது. இவர் சினிமா துறையில் பல சாதனைகளை புரிந்தவர்.

-விளம்பரம்-

கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவருடைய நடிப்பு திறமைக்காக இவர் வாங்காத விருதுகளே இல்லை. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதையும் பாருங்க : கோரோனா புண்ணியத்துல கடந்த 15 நாளா முழுநேர விவசாயியா மாறிட்டேன்-பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.

- Advertisement -

இதனால் தான் இவரை உலகநாயகன் கமலஹாசன் என்று தான் அழைக்கிறார்கள். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்தது தான். 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்து மாபெரும் ஹிட் கொடுத்த விஸ்வரூபம்-2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் சினிமாவில் நடித்து கொண்டு இருந்தாலும் அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் நடிகர் கமலஹாசனின் சண்டைக் காட்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பொதுவாகவே திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அதிக மெனக்கட்டு நடிப்பவர் கமலஹாசன். இது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : திறந்துவிட்ட பட்டன், ஒன் சைடு கிளாமர் கோலம். ரோஜா சீரியல் நடிகையா இது.

-விளம்பரம்-

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதை போலவே செய்வதும், சண்டைக்காட்சிகள், சாகச காட்சிகள் என எதுவுமே இருந்தாலும் டூப் போடமால் நடிப்பார். இதனாலே தான் இவர் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கிறார். மேலும், நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் அவர் நடித்து அசத்தும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அவர் பல படங்களில் டூப் போடாமல் நடித்த சண்டை காட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைத்து வீடியோவாக வெளிவந்து உள்ளது. அந்த வீடியோவை பார்ப்பதற்கு பதற வைக்கிறது. அந்த அளவிற்கு அவருடைய நடிப்பும், ஆக்ஷன் காட்சிகளும் உள்ளது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதனை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது நடிகர் கமலஹாசன் அவர்கள் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது சங்கர் இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதனைத் தொடர்ந்து கமல் அவர்கள் தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement