‘எனக்கு முன்னாடியே விஜய் பாடிட்டாரு’ ஏன்னு கேட்டா’ முதல் பாடல் அனுபவம் குறித்து விஜய் அம்மா அளித்த பேட்டி.(எந்த பாடல் தெரியுமா)

0
504
vijay
- Advertisement -

விஜய் முதல் முதலாக பாடிய பாடல் குறித்து விஜய்யின் தாய் சோபா அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிகர் என்பதை தாண்டி டான்சர், பாடகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
Vijay Plans To Shoot Thalapathy-66 Only Tamil Nadu| தளபதி 66

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்கா ? – அவரே சொன்ன விஷயம். பாலா சொன்ன அட்வைஸ்.

- Advertisement -

தளபதி 66 படம் :

மேலும், இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Vijay Latest Pic From Thalapathy 66 | தளபதி 66 விஜய் லுக்

படத்தில் விஜய் ரோல்:

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா கமிட் ஆன நிலையில் இன்னொரு ஜோடியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்த Mehreen Pirzada கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் தாயார் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-
Vijay Plans To Shoot Thalapathy-66 Only Tamil Nadu| தளபதி 66

விஜய் பற்றி சோபா அளித்த பேட்டி:

அதில் அவர் விஜய் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் விஜயுடன் இணைந்து முதல் முறையாக பாடி இருந்தது விஷ்ணு படத்தில் தான். தேவா சார் இசையில் அந்த பாடலை சேர்ந்து பாட போகிறோம் என்பது தெரியும். ஆனால், விஜய் முதலிலேயே சென்று பாடி விட்டு வந்தார். ஏன் முன்னாடியே பாடிவிட்டு வந்தாய்? என நான் கேட்டேன். அதற்கு விஜய்,

விஜய் உடன் சோபா பாடிய பாடல்:

உங்களுடன் சேர்ந்து பாடினால் என்னை விட நீங்கள் சிறப்பாக பாடுவீர்கள் என்பதால் தான் என்று கூறினார். பின் நாங்கள் 2 பேருமே சேர்ந்து பாடிய அந்தப் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகி இருந்தது. அதே போல விஜய் பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் நன்றாக இருந்தது என்று கூறி சோபா அவர்கள் தொட்டபெட்டா ரோட்டுமேல பாடலின் சில வரிகளை பாடி இருந்தார்.

Advertisement