இப்படி பண்ணா 2 கோடி தரேன்னு கோலிவுட்டை சேர்ந்த இவரே சொன்னாரு – சுச்சி லீக்ஸ் சுசித்ரா கொடுத்த ஷாக்.

0
1258
suchi
- Advertisement -

தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாய் கொழுந்து விட்டு எரியும் சம்பவம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் மரணம்.ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்த காரணத்தினால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்ஸை கைது செய்து போலீசார் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளார்கள். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் இருவரும் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளது. இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இணையத்தில் மிகப் பெரிய புரட்சியே வெடிக்கிறது. இந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 5 காவலர்களை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்தரா தனது ட்விட்டரில் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : வெளிநாட்டில் இருக்கும் தளபதி மகன் – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். பாடகி சுசித்தராவின் வீடியோ மற்றும் கருத்துகள் பிற மொழி மக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து பாடகி சுசித்தரா அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, கடந்த ஆட்சியிலும்(எதிர்கட்சி ஆட்சியில் இருந்தப் போது) இதேப் போன்று சம்பவம் நடந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும்.

அதற்காக 2 கோடி ரூபாய் வரை எனக்கு பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை என்று கூறி உள்ளார். சினிமா பின்னணி உள்ள நபர் ஒருவர் தான் பாடகி சுசித்தராவிடம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், சுசித்ரா தன்னிடம் பேரம் பேசியவர் யார் என்ற விவரத்தை பதிவு செய்யவில்லை. சாத்தான்குளம் சம்பவம் குறித்து கடுமையான சர்ச்சைள் போய் கொண்டு இருக்கும் நிலையில் பாடகி சுசித்ராவின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement