சூர்யவம்சம் பட நடிகையா இது…? இப்படி மாறிட்டாங்க..! புகைப்படம் உள்ளே.!

0
1739
Priya-Ramans
- Advertisement -

சீரியலைப் பொறுத்தவரை, சோக்கர் டைப் நகையும், லாங் நெக்பீஸையும், ஆன்டிக் ஜூவல்லரி, டெம்பிள் கலெக்‌ஷன், குந்தன் டைப் போன்ற பேட்டன்களில் மிக்ஸ் மேட்ச் செய்து போட்டுக்கறேன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு, `செம்பருத்தி’ சீரியல் மூலம் ஸ்ட்ராங் ரோலில் கம் பேக் கொடுத்திருப்பவர் பிரியா ராமன்.

-விளம்பரம்-

priya-raman

- Advertisement -

தன்னுடைய எக்ஸ்பிரஷன், கலர்ஃபுல்லான ஆடைத் தேர்வால் மக்களின் மனதைக் கொள்ளையடிப்பவர். தன்னுடைய வார்ட்ரோப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

கிராண்டு லுக்:
சிம்பிள் அண்டு நீட் லுக், என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் ஆனால், சீரியலில் கிராண்டு டிரஸ், வெரைட்டி நகைகள் என வலம் வந்துட்டிருக்கேன். எப்பவும் சிம்பிள் லுக்கில் இருந்து பழகியதால், இவ்வளவு கிராண்டு லுக் செட் ஆகுமான்னு தயக்கம் இருந்துச்சு. அகிலாண்டேஸ்வரி கேரக்டருக்கு இந்த லுக் அவசியம் என்பதால், சம்மதிச்சேன். சில எபிசோடுகளிலே என் ஆடைத் தேர்வும், அணிகலன்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. நிறைய ரசிகைகளும் கிடைச்சிருக்காங்க. ஸோ ஹேப்பி!

-விளம்பரம்-

Priya raman actress

ஆடைத் தேர்வு:

பொதுவாக, வெஸ்டர்ன் டைப் ஆடைகளே என்னுடைய சாய்ஸ். என் உடல்வாகுக்கு வெஸ்டர்ன் ஆடைகள்தாம் பொருத்தமாக இருக்கும். சீரியலுக்காக, காஞ்சிபுரம், பனராசி எனப் பட்டுப்புடவைகளின் வகைகளை எபிசோடுக்கு ஏற்ப டிசைனர்களின் உதவிகளோடு தேர்வுசெய்து அணிகிறேன். டிரடிஷனல் புடவைதான் என்றாலும், பிளவுஸ்களில் கொஞ்சம் டிரண்டி வெரைட்டி காட்டி, நீயூ லுக்குக்கு மெனக்கிடறேன். பேட்சஸ் வொர்க்ஸ் செய்யப்பட்ட பிளவுஸ்கள், கோல்டு ஷோல்டர் பிளவுஸ்கள், ஸ்டோன் வொர்க் பிளவுஸ்கள், ஜர்தோஸி பிளவுஸ்களை செலக்ட் பண்றேன். கேரக்டரின் மெச்சூர்டு லுக்குக்காக, த்ரீஃபோத் பிளவுஸ்கள் என் சாய்ஸாக உள்ளன. டிரண்டு என்பது நாம உருவாக்குறதுதானே.

அக்ஸசரிஸ்:

சீரியலைப் பொறுத்தவரை, சோக்கர் டைப் நகையும், லாங் நெக்பீஸையும், ஆன்டிக் ஜூவல்லரி, டெம்பிள் கலெக்‌ஷன், குந்தன் டைப் போன்ற பேட்டன்களில் மிக்ஸ் மேட்ச் செய்து போட்டுக்கறேன். ரியல் லைஃப்பில் சிம்பிளான குந்தன் டைப் கலெக்‌ஷன் அதிகமாக இருக்கு. நீட் லுக் கொடுக்கும் டைமண்டு வகை அணிகலன்கள் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்! எனக்கு வாட்ச்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். நிறைய வாட்ச் கலெக்‌ஷன்களும் வைத்திருக்கிறேன்.

priya actress

நிறத் தேர்வு:

என்னுடைய ஸ்கின் டோனுக்கு மஞ்சள், கறுப்பு, ஐவரி கலர்கள் பொருத்தமாக இருக்கும். இவை என்னுடைய விருப்பமான நிறங்களும். சீரியலில் கலர்ஃபுல்லான தோற்றத்துக்கு எல்லா பிரைட் நிறங்களையும் அணிகிறேன்.

ஆன்லைன் ஷாப்பிங்:

எனக்கு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யறது ரொம்பப் பிடிக்கும். நிறைய மாடல்களைப் பார்க்க முடியும். நம் உடல் அமைப்புக்கு ஏற்ப ஆடைகளைத் தேர்வுசெய்ய தெரிந்திருந்தால் ஆன்லைன் ஷாப்பிங் பெஸ்ட்.

மெமரபிள் டிரஸ்:

`வள்ளி’ படத்தில் நடிக்கும்போது அணிந்திருந்த பாவாடை, சட்டை, தாவணிகளே என் மெமரபிள் டிரஸ். முதன்முதலில் தாவணியை அப்போதான் போட்டுக்கிட்டேன். அவ்வளவு ஹேப்பி. ஒரு சீக்ரெட் சொல்லட்டா? அன்னைக்கு, தாவணி கட்டத் தெரியாமல் நின்றபோது, லதா ரஜினிகாந்த் மேடம்தான் கட்டிவிட்டாங்க. அது சம் திங் ஸ்பெஷல்!

Actress-priya

மேக்அப்:

இந்த சீரியலில் ஹேர்ஸ்டைலுக்கும் கண்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனக்கு வட்ட வடிவ முகம் என்பதால், ஹேர்ஸ்டைலின் மூலம்தான் மெச்சூர்டு லுக் கொடுக்க முடியும். ஸோ, பல வகையான ஸ்டைல்களை முயற்சி செய்யறேன். அகிலாண்டேஸ்வரி கேரக்டர் தன் கண் அசைவுகளில் மூலமே தன் மனதில் உள்ளதை வெளிபடுத்தும் கேரக்டர் என்பதால், ஐ- லைனர், ஐ-ஷேடோ,மஸ்காரா,காஜல் போன்றவற்றைப் பயன்படுத்தி கண்களை அழகாகக் காட்டுகிறோம்.

Advertisement