அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் லுங்கியில் பொது இடத்திற்கு வந்த விஜய் தேவர்கொண்டா.

0
6090
Vijay-Devarakonda
- Advertisement -

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அதே போல சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் “நோட்டா “என்ற தமிழ் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

விஜய் தேவர்கொண்டா அவர்கள் சினிமா உலகிற்கு வந்த குறுகிய நாளிலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். மேலும், பிரபல பத்திரிகை நிறுவனமானன போர்ப்ஸ் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் சாதனையாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஃபைட்டர் என்ற படத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

- Advertisement -

நேற்று மும்பையில் ஒரு பிரபல சலுனுக்கு விஜய் தேவரகொண்டா அவர்கள் சென்று உள்ளார். அப்போது அவர் அணிந்து வந்த உடை பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்து உள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் லுங்கி மற்றும் சாதாரண உடையில் பொது இடத்திற்கு வந்துள்ளார். இவரை தென்னிந்திய ரன்வீர் சிங் என்றும் அழைப்பது உண்டு. காரணம் அவர் தான் வித்தியாசமான ஆடை அணிவார். அதேபோல் தென்னிந்தியாவில் வித்தியாசமான உடைகளை அணிபவர் விஜய் தேவர்கொண்டா. இப்பொழுது இறுதியில் மிகவும் எதிர்பார்க்காத அளவிற்கு வித்தியாசமான ஆடையை அணிந்து கொண்டு பொது இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் விஜய் தேவர் கொண்டா. அவர் அப்படி உடையணிந்து வந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Image result for vijay devarakonda in lungi

-விளம்பரம்-

தற்போது இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் லவ்வர் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். இயக்குனர் க்ரந்தி மாதவ் தான் இந்த படத்தின் கதை, வசனம் எழுத்தாளர் ஆவார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக இருக்க போகிறது.

Advertisement