‘ஜோதிகா நடிச்சா நம்ம காலி-ன்னு நடிக்க வரவில்லை’ – அட்வான்சை கூட பெற்றுவிட்டு படத்தில் இருந்து பாதியில் விலகிய அசின்

0
763
Jyothika
- Advertisement -

தமிழ் சினிமா மலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகளை இறக்குமதி செய்துள்ளது, அப்படி வந்த நடிகைகளில் நடிகை அசின் மிகவும் தரமான நடிகை என்று கூட சொல்லலாம். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஷாம் மற்றும் விஷால் நடித்த ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஷாம் ஜோடியாக அறிமுமானார். அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.

-விளம்பரம்-

இதனால் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார் அசின்.பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது. அதன் பின்னர் சினிமாவில் அசின் தலைகாண்பிக்கவே இல்லை. நடிகை அசின் முன்னணி நடிகையாக இருந்த போது பல முன்னனி நடிகைகளுடன் நடித்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : Stamp Duty மட்டுமே 7.13 கோடி, ஒரு சதுர அடி 1.05 லட்சம் – அரபிக் கடல் அருகே ரன்வீர் தீபிகா கட்டி வரும் வீட்டின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா ?

முன்னனி நடிகையாக வலம் வந்த அசின் :

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் வந்த குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கமல் என்று டாப் நடிகர்களுடன் நடித்தார் அசின்.அந்த வகையில் இவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை கொடுத்தது சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படம் தான். இந்த படத்திற்கு பின்னர் தான் இவருக்கு விஜய், அஜித், விக்ரம் என்று பலருடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், வளர்ந்த பின்னர் சூர்யா பட வாய்ப்பையே நிராகரித்துள்ளார் அசின்.

-விளம்பரம்-

சில்லுனு ஒரு காதல்

அது தான் சில்லுனு ஒரு காதல் திரைப்படம். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் ஜோதிகாவை விட அதிகம் பிரபலமடைந்தது ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பூமிகா தான். ஆனால், முதலில் இந்த ரோலுக்கு முதலில் கமிட் செய்யப்பட்டது அசின் தான். சொல்லப்போனால் சூர்யா தான் இந்த படத்திற்கு அசினை சிபாரிசு செய்தார்.

கதையை மாற்ற சொன்ன அசின் :

ஆனால், இந்த படத்தில் தன்னை விட ஜோதிகாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் இருப்பதாக கூறிய அசின் இந்த தன் கதாபாத்திரத்தை மாற்ற சொல்லி இருக்கிறார். அது போக நிறைய சீனை தனக்கு வைக்க வேண்டும் என்றும் ஒரு பாடலையும் சேர்க்குமாறும் கூறியுள்ளார் அசின். ஆனால், இதற்கு இயக்குனர் ஒப்புக்கொள்ளாமல் போக இந்த படத்தில் இருந்து விலகினார் அசின். இதுகுறித்து அப்போது பேசிய சூர்யா ‘விஜய்யின் சிவகாசி மற்றும் விக்ரமின் மஜா ஆகிய படங்களில் நடித்ததை விட அசினுக்கு இந்த படத்தில் நல்ல ரோல் தான். இதற்கு அவருக்கு பெரும் தொகை அட்வான்ஸாக வழங்கப்பட்டது.

அசினை திட்டி தீர்த்த சூர்யா :

அசின் முதலில் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், மேலும் எனது தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் அவரைச் சந்தித்து அவருக்கு ஒரு பெரிய முன்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்கிரிப்டை மீண்டும் மாற்ற வேண்டும் என்று கூறி பின்வாங்கினார். எந்த ஒரு சுயமரியாதை இயக்குனராவது தனது திரைக்கதையை மாற்றிக்கொள்வாரா? மஜா மற்றும் சிவகாசியில் அசின் நடித்த ரோலை விட இந்த படத்தில் ஐஷு கேரக்டர் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். போனது போனதுபடி இருக்கட்டும் என்பதால் இனி அதைப் பற்றி பேச வேண்டாம் என்று கூறினார் சூர்யா.

படத்தின் இயக்குனர் சொன்ன விஷயம் :

அதே போல சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் ‘அந்த படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரம் என்றால் ஐஸ்வர்யா கதாபாத்திரம் தான் பெரிய நடிகைகள் கூட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினார்கள் அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்று சொன்னதுமே அனைவரும் தயங்கி, ஜோதிகா நடித்தால் நம்ப காலினு நடிக்கவே வரவில்லை. பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பயந்து இறுதியில் பூமிகாவை தேர்வு செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement