நானும் அவரும் காதலிச்சது எல்லாருக்கும் தெரியும் – கமல் குறித்து ஓப்பனாக பேசிய ஸ்ரீவித்யாவின் பழைய பேட்டியின் வீடியோ இதோ.

0
513
- Advertisement -

நடிகை ஸ்ரீவித்யா- கமல் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து நடிகை குட்டி பத்மினி வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்த திரை உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் குட்டி பத்மினி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

60, 70 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், பெண் தொழிலதிபர் என பன்முகங்களைக் கொண்ட திகழ்கிறார். இவர் தனியாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் முன்னணி நடிகைகள் மற்றும் திரைத்துறை அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

கமல் – ஸ்ரீவித்யா காதல் :

இந்த நிலையில் நடிகை ஸ்ரீவித்யா- கமல் குறித்து குட்டி பத்மினி வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், ஸ்ரீவித்யா ஒரு அழகான நடிகை. அவரை போல ஒரு அழகான நடிகை நான் பார்த்தது கிடையாது. அவருடைய கண்கள் ரொம்ப அழகாக இருக்கும். அவர் கமலஹாசன் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது கமலஹாசன் மீது ஸ்ரீவித்யாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அதோடு கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு பல நடிகைகள் ரசிகர்களாக இருந்தார்கள்.

ஸ்ரீவித்யா-கமல் உறவு:

அதுபோலதான் கமலின் நடிப்பை பார்த்து ஸ்ரீவித்யாவும் அவர் மீது காதல் வைத்திருந்தார். ஒருமுறை நான் கமலுடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கமல், வாணி கணபதியை காதலித்துக் கொண்டிருந்தார். வாணிக்காக அவர் ஏர்போர்ட்டில் கிப்ட் வாங்கினார். அதேபோல இந்தி நடிகை ரேகாவுடனும் கமலின் பெயர் அடிபட்டு வந்தது. இதனால் காதல் எல்லாம் எதுவும் வேண்டாம் என்று ஸ்ரீவித்யாவிடம் நான் நேரடியாகவே சொன்னேன். ஆனால், நான் சொன்னதையே அவர் கேட்கவில்லை.

-விளம்பரம்-

கமல் காதலித்த நடிகைகள்:

அந்த காலத்தில் கமல் ஒரே நேரத்தில் ஆறு பெண்களை எல்லாம் காதலித்தார். ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா, ஜெயசுதா, வாணி கணபதி ஆகிய இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு நடிகைகள் இருந்தார்கள். அத்தனை நடிகைகளும் அவர் எப்படி சமாளித்தார்? என்றே தெரியவில்லை. இதனால் தான் அவருக்கு சகலகலா வல்லவன் என்று பெயர் வந்திருக்கும். பின் வாணி கணபதியை கமல் திருமணம் செய்து கொண்டதால் ஸ்ரீவித்யா மனதளவில் மிகவும் உடைந்து விட்டார். இதிலிருந்து அவரால் பல வருடங்கள் மீண்டு வரவே முடியவில்லை.

ரீவித்யா இறப்பு:

இந்த நேரத்தில்தான் ஸ்ரீவித்யா, ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் ஜார்ஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பின் ஸ்ரீவித்யா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது புற்றுநோய் காரணமாக ஸ்ரீவித்யா நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். கடைசி காலத்தில் யாரையுமே சந்திக்காத ஸ்ரீவித்யா கமலஹாசனை மட்டும் பார்க்க விரும்பினார். கமலஹாசனும் ஸ்ரீவித்யா ஆசைப்படி அவரை சந்தித்தார். புற்றுநோயுடன் போராடி வந்த ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு கேரளாவில் அனாதியாக இறந்தார் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

ஸ்ரீவித்யாவின் பழைய பேட்டி :

இப்படி ஒரு நிலையில் கமளுடனான காதல் குறித்து ஸ்ரீவித்யா பேசிய பழைய வீடியோ ஒன்றில்’ நானும் அவரும் காதலிச்சது ஒட்டுமொத்த திரை துறைக்கும் எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் தெரியும். ஒரு நாள் என் அம்மா எங்கள் இருவரையும் அழைத்து. உங்கள் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இதனால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துடிச்சி. அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவே இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக நான் கேள்விப்பட்டவுடன் நான் அவரை இழந்துவிட்டேன் என்று அப்படியே உறைந்து போனேன் ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement