கூர்ந்து கவனித்த மோகன்லால், கழட்டி கையில் கொடுத்த சிவாஜி – ஆச்சர்யப்பட்ட பிரபு.

0
490
mohan
- Advertisement -

சிவாஜி – மோகன்லால் குறித்து எழுத்தாளர் சுரா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மிகவும் பிரபலமான எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமானவர் சுரா. இவர் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், தான் ரசித்த நடிகர்களை குறித்தும் பிரபல யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக அதில் அவர் சிவாஜி கணேசன் மற்றும் மோகன்லாலுக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, மோகன்லால் பெருமைப்படும் அளவிற்கு ஒரு விஷயத்தை சிவாஜி செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதாவது, ’ஒரு யாத்ராமொழி’ என்ற மலையாளத்தில் 1997ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார் அவருக்கு தந்தையாக சிவாஜிகணேசன் நடித்து இருந்தார் கதைப்படி மோகன்லால் மலையாளம் பேசக்கூடியவர், சிவாஜி தமிழ் பேசக் கூடியவர். மேலும், இந்த படத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். படம் வெளியாகி கேரளாவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு மகனாக நடித்ததற்கு மோகன்லால் ரொம்பவும் பெருமையாக நினைத்தார்.

- Advertisement -

மோகன்லால்-சிவாஜி நடித்த படம்:

தன்னுடைய ஆரம்ப காலங்களில் கேரளாவிற்கு நாடகம் நடிக்க வந்தது பற்றி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களிடம் சிவாஜி நிகழ்ச்சியாக பேசுவாராம். சிவாஜி கதகளி பார்க்க வேண்டும் என்ற ஆசை பட்டதால் அதற்காக ஏற்பாடெல்லாம் செய்து கொடுத்திருந்தார் மோகன்லால். அந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டது. அந்த சூட்டிங்கை முடித்து விட்டு சென்னை திரும்பிய சிவாஜி, சென்னை வந்தால் என்னுடைய வீட்டிற்கு கட்டாயம் வரவேண்டும் என மோகன்லாலிடம் கூறி இருக்கிறார்.

சிவாஜி வீட்டுக்கு வந்த மோகன்லால்:

கொஞ்ச நாள் கழித்து மோகன்லால் தன்னுடைய மனைவியுடன் சென்னை வருகிறார். வீட்டிற்கு வர வேண்டும் என்று சிவாஜி அழைத்து இருந்ததால் தன்னுடைய மனைவியுடன் மோகன்லால் அவர்கள் சிவாஜியின் வீட்டிற்கு சென்று இருந்தார். பின் மோகன்லால் கையை பிடித்துக்கொண்டு வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையாக அழைத்து சென்று சிவாஜி காட்டி இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு தகப்பன் தன்னுடைய மகனின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் உணர்வு தனக்கு ஏற்பட்டதாக அவர் எழுதிய புத்தகத்தில் மோகன்லால் குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

சிவாஜி கொடுத்த பரிசு:

அங்கிருந்த சிவாஜியின் புகைப்படங்கள் அவர் வாங்கிய விருதுகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடந்தபோது ஒரு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தது போல மோகன்லாலுக்கு இருந்ததாம். அப்போது சிவாஜி கையில் ஒரு வாட்ச் இருந்தது. அதை நீண்ட நேரம் மோகன்லால் பார்த்துக் கொண்டிருந்தார். அதை கவனித்த சிவாஜி அந்த வாட்சை கலட்டி மோகன்லாலின் கையில் கட்டி விடுகிறார். இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து எதேச்சையாக பிரபுவை மோகன்லால் சந்தித்திருக்கிறார்.

சிவாஜி குறித்து பிரபு சொன்னது:

அப்போது சிவாஜி வாட்ச் பரிசளித்தது குறித்து பிரபுவிடம் கூறியிருக்கிறார். அதற்கு பிரபு, அந்த வாட்ஸ் அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த வாட்ச். பொதுவாக அவருக்கு பிடித்தது யாருக்கும் கொடுக்க மாட்டார். உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் என்றால் உங்களையும் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று அர்த்தம் என்று கூறியிருந்தார். அதைக் கேட்கும்போது மோகன்லாலுக்கு ரொம்ப பெருமையாகவும் இருந்தது. இதை அனைத்துமே மோகன்லால் தான் எழுதிய புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement