தோல்விகளால் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக மாறிய வெற்றிப்பட இயக்குநர். யார் தெரியமா ?

0
820
jayalalitha
- Advertisement -

பாலகிருஷ்ணன் மாதவன் ஜனவரி 1 1928ல் வாலாஜாபேட்டையில் பிறந்தவர். தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், “அருண் பிரசாத் மூவீஸ்” என்ற பெயரில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.பி. மாதவன் அவர்கள் அப்போதே பி.ஏ பட்டம் பெற்று படித்து முடித்துவுடனே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்றும் தான் முகம் சிறுவயதிலே அழகாக இருந்தால் தனது தாயார் ராதாமணி இடம் நடித்து காட்டியவுடன் அவர் உனக்கு பெரிய எதிர்காலம் உண்டு என்று கூற தனது சொந்த ஊரான வாலாஜாபேட்டையில் இருந்து சென்னைக்கு இரயில் ஏறினார். ஆனால் எதிர்காலம் திரையுலகில் அவரை ஒரு இயக்குனர் ஆக மாற்றியது.

-விளம்பரம்-

திரையுலக பயணம் :-

- Advertisement -

ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் ஶ்ரீதர் ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த மணியோசை இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்ல கதைகளம் இருந்தும் இவரது முதல் படமே தொல்வி அடைந்தது. அதன் பின் சிவாஜி கணேசன் உடன் இணைந்து அன்னை இல்லம் என்ற திரைப்படத்தை இயக்கினார். முதல் திரைப்படமே தொல்வியடைந்ததால் இப்படத்தை சிவாஜி கணேசனை வைத்து மிகவும் கவனத்துடன் இயக்கி வெற்றி திரைப்படமாக்கினார். இதனால் மேலும் சிவாஜி கணேசனின் நட்பினால் அவரை வைத்து 15 படங்கள் இயக்கியுள்ளார். எம். ஜி. ஆர் அவர்களின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸை நிறுவிய ஆர். எம். வீரப்பன் அவர்கள் உதவியால் அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான தெய்வத்தாய் படத்தை எம். ஜி. ஆர் அவர்களை வைத்து இயக்குகின்ற வாய்ப்பை பெற்றார். மேலும் எம்ஜிஆரை வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படமாக அமைந்தது.

இளையராஜா முதல் முதலாக இசையமைத்த “அன்னக்கிளி” திரைப்படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவின் போது திடீரென மின்சாரம் தடைபட்டது. அதிக நேரமாக அனைவரும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதுமட்டுமல்ல, “புது மியூசிக் டைரக்டர். எடுத்தவுடனேயே தடங்கலா? விளங்கிரும்” என அங்கிருந்த சிலர் இளையராஜாவை கிண்டலடித்தார்கள். இளையராஜா எதையும் பொருட்படுத்தாமல் தனியாக ஓரிடத்தில் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். ஒலிப்பதிவு கூடத்தில் சிறு சலசலப்பு நிலவிய வேளையில் சற்று மெலிந்த தேகத்துடன் ஒயிட் அண்ட் ஒயிட் டில் ஒருவர் அறைக்குள் நுழைந்தார். மெதுவாக நடந்து கொண்டே இளையராஜாவின் அருகே வந்து அவர் தோளைத் தொட்டு ராஜா என்றார். இளையராஜா ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து தனது இரு கரங்களையும் குவித்து வணக்கம் தெரிவித்தார்.

-விளம்பரம்-

மிகச்சிறந்த மனிதர் பி.மாதவன் :-

“ஒண்ணும் கவலைப்படாதே, இந்தா உனக்காக மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணினேன். பிரசாதம் எடுத்துக்கோ” என்று இளையராஜாவிடம் கொடுத்தார். அங்கிருந்த சிலர் அடித்த கிண்டலால் லேசான மனக் கலக்கத்துடன் இருந்த இளையராஜாவுக்கு அந்தப் பிரசாதம் நிஜமாகவே மன ஆறுதலாக இருந்தது. “ஒன்ன என்னோட படத்துல தான் இசையமைப்பாளரா அறிமுகபடுத் தணும்னு இருந்தேன். ஆனால் பஞ்சு அருணாசலம் முந்திக் கொண்டார். பரவாயில்லை. எனக்கு அவர் நண்பர் தான். ரொம்ப சந்தோஷம். “அன்னக்கிளி” படத்துக்கப்புறம் உன்னோட ரெண்டாவது படம் என்னோடதாத்தான் இருக்கணும். நீ பெரிய ஆளா வருவே பாரேன்” என இளையராஜாவைத் தன் வாயார வாழ்த்தி விட்டு அங்கிருந்து சென்றார் இயக்குனர் பி.மாதவன்.

என் வாழ்வில் நம்பிக்கை ஔி ஏற்றியவர் மாதவன் :-

பி.மாதவன் அங்கிருந்து சென்ற சில வினாடிகளில் மின்சாரம் வந்தது. இளையராஜா சந்தோஷமாக வேலையைத் துவக்கினார். அன்னக்கிளி படம் வெற்றி பெற்றது. பி.மாதவன் கேட்டுக் கொண்டதற்காக அவர் இயக்கிய “பாலூட்டி வளர்த்த கிளி” படத்துக்கு இசையமைத்து இயக்குனர் பி.மாதவன் எண்ணத்தை நிறைவேற்றினார் இளையராஜா. தனது வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றியவர் பி.மாதவன் என்று ஒரு பேட்டியின்போது இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார்.

பி.மாதவன் வெற்றி படங்கள், விருதுகள் :-

இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில மணியோசை, அன்னை இல்லம், தெய்வத்தாய், எங்க ஊர் ராஜா, குழந்தைக்காக, கண்ணே பாப்பா, வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, நிலவே நீ சாட்சி, சபதம், தேனும் பாலும், ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், சங்கர் சலீம் சைமன், ஏணிப்படிகள், ஹிட்லர் உமாநாத், அக்னி பார்வை. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
1970 – ராமன் எத்தனை ராமனடி – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது.
1972 – பட்டிக்காடா பட்டணமா – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது.
1970 – நிலவே நீ சாட்சி – சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது.

Advertisement