சாப்பாட்டுக்காக நாயை விற்ற Sylvester Stallone – ஹாலிவுட்டின் ராக்கி பாயான கதை.

0
460
Sylvester--Stallone
- Advertisement -

உலகம் முழுவதும் ஹாலிவுட் கதாநாயகர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் ஹாலிவுட் கதாநாயகர்களில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் சில்வெஸ்டர் ஸ்டாலோன். இவருடைய உண்மையான பெயர் Michael Sylvester Gardenzio Stallone. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு காலங்கள் கடந்தாலும் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இவரைப் பற்றி அறியாத பல விஷயங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நடிகர் ஸ்டாலோன் பிறக்கும்போதே பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். இவர் பிரசவத்தின்போது ஃபோர்செப்ஸ் எனப்படும் இடுக்கி போன்ற மருத்துவக் கருவியால் குழந்தையை இழுக்கும் போது ஏதோ ஒரு நரம்பை தாக்கி இவருடைய முகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. பின் பிறந்த குழந்தைக்கு பக்கவாதம் என்று கூறியிருந்தார்கள். எப்படியோ அதிலிருந்து ஸ்டாலோன் மீண்டு விட்டார். ஆனால், அவருடைய முகத்தில் இடப்பக்க கீழ் பகுதி கோணலாக இழுத்து கொண்டது.

- Advertisement -

உதடு கோணி கொண்டது. இதன் காரணமாக அவருக்கு பேசும் போது சிக்கல் ஏற்பட்டது. வாழ்நாள் முழுக்க இந்த பிரச்சனை ஸ்டாலோனுக்கு தொடர்ந்து தான் இருந்தது. பள்ளி படிக்கும் போதே இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் வந்தது. இதனால் இவர் பள்ளி,கல்லூரி நாட்களில் ஆர்வத்தோடு நடித்து இருந்தார். பின் 1969 ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடிக்கத் துவங்கிவிட்டார். ஆனால், ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இதனால் சினிமாவில் பெரிய அளவு வருமானம் கிடைக்கவில்லை.

பின் ஸ்டாலோன் வயிற்று பசிக்காக கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து கொண்டுள்ளார். கூட்டிப் பெருக்கும் வேலை, சினிமா தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பணி என பல வேலைகளை செய்துள்ளார். அதற்காக எல்லாம் ஒரு நாளும் ஸ்டாலோன் கவலைப்பட்டதில்லை. சினிமாவில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? எப்படி தன்னை தயார் படுத்த வேண்டும்? என்பதிலேயே இவர் அதிக கவனம் செலுத்தி இருப்பார். ஒரு கட்டத்தில் வாடகை கூட கொடுக்க முடியாமல் அவர் தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் இருந்து அவரை துரத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தது அவர் வளர்த்த செல்ல நாய் பட்கஸ் தான்.

-விளம்பரம்-

கிடைத்த இடத்தில் ஸ்டாலோன் தங்கிக் கொண்டு பல இரவு பொழுதை கழித்து இருந்தார். இரண்டு ஜீன்ஸ், 4 சட்டைகள், இரண்டு ஜோடி ஷூ. இது தான் இவருடைய சொத்துக்கள். உலக புகழ்பெற்ற இயக்குநர் கொப்பாலாவின் `தி காட் ஃபாதர்’ படத்தில் ஒரு சின்ன ரோலாவாது கிடைக்காதா? என்று ஸ்டாலோன் முயற்சி செய்தார். ஆனால், கிடைக்கவில்லை. வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு கதவு திறக்கும் என்பார்கள் அப்படிப்பட்ட நாள்தான் ஸ்டாலோன் வாழ்க்கையில் வந்தது. 1975ஆம் ஆண்டு அவர் ஒரு குத்து சண்டையை பார்க்கப் போயிருந்தார்.

இந்த சண்டை ஸ்டாலோன் வெகுவாக பாதித்தது. குத்து சண்டையை மையமாக வைத்து ஒரு ஸ்க்ரிப்ட் எழுதலாமே என்று நினைத்தார். வீட்டுக்கு வந்து அவர் அன்றிரவே கதையை எழுத ஆரம்பித்தார். மூன்று நாட்களில் கதையை எழுதி முடித்தார். தயாரிப்பாளர்களை தேடி தன் கதையை வைத்து அழைந்தார். அவர் பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொன்னார். தயாரிப்பாளர்களுக்கு அனைவருக்குமே அவருடைய கதை பிடித்தது. ஆனால், ஸ்டாலோன் வைத்த கண்டிஷன் தான் பிடிக்கவில்லை. அந்த கதையில் நானே நடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவே இல்லை.

ஒரு தயாரிப்பாளர் முகத்துக்கு நேராகவே, நீங்க எப்படி நடிபீங்க? வாயும் உதடும் கோணி இருக்கே, உங்களை எப்படி மக்கள் ஹீரோவா ஏத்துக்குவாங்க என்றெல்லாம் பேசினார். பின் இவருடைய கதையை அரைமனதோடு இரண்டு தயாரிப்பாளர்கள் இயக்க முன்வந்தார்கள். படம் வெளியானது. சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த எடிட்டிங் என மூன்று ஆஸ்கர் அவார்டுகளையும் வென்றது. அந்தப் படத்திற்குப் பின் ஸ்டாலோன் என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. பின் ராக்கி பாயாகவே ஸ்டாலோன் திகழ்ந்தார்.

Advertisement