தல 58 படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பதில் இதோ !

0
2167
ajith

தல அஜீத் மற்று இயக்குனர் விஷ்ணுவர்த்தன்- கூட்டணி மீண்டும் இணையப் போகின்றார்கள் என்பதே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த 2003-ம் ஆண்டு குறும்பு என்ற தமிழ்ப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு ஒரு நல்ல அடையாளமாக அமைந்தது பில்லா.

அடுத்ததாக மீண்டும் இரண்டாவதாக இணைந்த படம் ஆரம்பம். இந்த படமும் மிகப்பெரிய ஹிட்டானது.

Vishnuvardhan

தற்போது மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்து மூன்றாவது முறையாக அதே கூட்டணியில் மற்றுமொரு படத்தினை இயக்கவுள்ளார் இயக்குனர் விஷ்ணுவரதன்.
அஜித் தரப்பினிலிருந்து க்ரீன் சிக்னல் காட்டப்படும் என்கிற நம்பிக்கையில் இந்த படத்தின் திரைகதையில் தீவிரமாக மூழ்கியுள்ளார் இயக்குனர்.

Ajith

ஆனால், தற்போது அஜீத்திற்கு தோள்பட்டையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மூன்று மாதகாலம் ஓய்வில் இருக்க முடிவெடுத்துள்ளார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றது. மேலும் அடுத்தவருடம் 2018-ம் மூன்றாம் வாரத்தில் தான் தல58 படம் துவங்கும் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் தல அஜீத்தின் அடுத்த படத்தையும் நான் தான் இயக்கப்போகிறேன் என்று சிறுத்தை சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

siruthai siva

ஒரு வேளை விஷ்ணு வர்தனுக்கு அஜீத் ஓகே சொல்லும் பட்சத்தில் 2018-ம் ஆண்டு அஜித்படம் வெளியாகாது. காரணம் படத்தின் ஷூட்டிங் மட்டும் 200 நாட்கள் நடக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி மாதம் படத்தை தொடங்கி 2018-ம் ஆண்டே படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை.

இதையும் படிங்க : அஜித் உடல்நிலை சீராக உள்ளது.. தல ரசிகர்கள் மகிழ்ச்சி...

சிவா இயக்கும் பட்சத்தில் 2018 தீபாவளி தல தீபாவளி தான்.

தல என்ன முடிவெடுக்கின்றார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.