தொடர்ந்து பெய்யும் மழையால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? – குடும்பத்தினர் அச்சம்

0
224
- Advertisement -

தொடர் மழையால் பிக் பாஸ் வீட்டுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி தான் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி பத்து நாள் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. அதோடு கடந்த வாரம் ரவீந்தர் செய்த பிராங் தான் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ரவீந்தர் பயங்கரமாக கத்தி ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பேசி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். கடைசியில் ரவீந்தர் தான் முதலில் நிகழ்ச்சியை விட்டு வெளியே போனார். ரவீந்தரும் எந்த வருத்தமுமே இல்லாமல் ஜாலியாக வெளியே வந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு விஜய் சேதுபதியை பார்த்து ரவீந்தர், செஞ்சிட்டிங்க சார் என்று பேசி இருந்தார். பின் விஜய் சேதுபதி, உங்கள் ஸ்டைலில் போட்டியாளர்களுக்கு ரிவியூ கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு ரவீந்தர், ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றியும் புட்டு புட்டு வைத்திருந்தார்.

அதிகரிக்கும் மழை:

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும் பகுதியில் மழை நிலவரம் எப்படி இருக்கிறது. போட்டியாளர்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறார்களா என்றெல்லாம் ரசிகர்களும் குடும்பத்தினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுவரை மொத்தம் ஏழு சீசன்கள் ஒளிபரப்பான போதிலும் ஒரு முறை மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் வந்து போட்டியாளர்கள் அங்கிருந்து நட்சத்திர ஹோட்டலில் ஓர் இரவு மட்டும் தங்க வைக்கப்பட்டனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டின் நிலைமை:

மேலும், செம்பரம்பாக்கம் ஏரி பிக் பாஸ் வீட்டிற்கு மிக அருகில் தான் இருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் இந்த ஏரி திறந்து பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏரி திறக்கப்பட்டதாலும் தொடர்ந்து பெய்த மழையாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் மழை வந்தது. ஆனால், பெரிய அளவில் சேதாரம் ஏற்படவில்லை. போட்டியாளர்கள் பத்திரமாக ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதனால், அதற்குப் பிறகு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாம்.

முன் எச்சரிக்கை ஏற்பாடுகள்:

அதோடு வானிலைத் தகவலை கண்காணித்துக் கொண்டிருக்க ஒரு குழு உள்ளதாம். அதேபோல் பிக் பாஸ் வீட்டிற்குள் மழை நீர் வந்தால் உடனடியாக வெளியேற்ற மோட்டார் இயந்திரங்கள், ஒருவேளை ஏறி திறக்கப்பட்டு தண்ணீர் வீட்டிற்குள் வந்தால் போட்டியாளர்களை பத்திரமாக தங்க வைக்க மாற்று ஏற்பாடுகளும் இந்த முறை செய்துள்ளார்களாம். பிக் பாஸ் டீம் செய்திருக்கும் முன் ஏற்பாடுகளால் இந்த முறையையும் மழையால் பிக் பாஸ் வீட்டிற்கு எந்த பாதிப்பும் பெருசா வராது என்று கூறி வருகிறார்கள்.

Advertisement