பாகிஸ்தானில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் நேற்று மாலை 3 மணி அளவில் ராணுவ முகாமிலிருந்து ராவல்பிண்டிவந்தடைந்தார். ராவல்பிண்டியில் இருந்து லாகூருக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார்.
லாகூரில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் வாகா எல்லைக்கு அவர் வந்த போது வாகா எல்லையில் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தது. அவரை வரவேற்க பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங் சென்றிருந்தார். மேலும் அபிநந்தன் வரவேற்க பஞ்சாப் மக்களும் கோலாகலமாக திரண்டனர்.
நேற்று மாலை 4 மணியளவில் லாகுருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தனை இரவு 9.10 மணிக்கு பாகிஸ்தான் அதிகரிகளால் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அபிநந்தன் கஇந்திய எல்லையான அட்டாரி நோக்கி நடந்து வந்தார். அவரை காண அங்கேய கூடியிருந்த மக்கள் கரகோசத்துடம் அவரை வரவேற்றனர்.
அபிநந்தனை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி மற்றும் ராணுவ அதிகாரிகள் எல்லைக்கு அழைத்து வந்தனர். அப்போது அபிநந்தனுடன் ஒரு பெண் அதிகாரி இருந்தார். நேற்று சமூக வலைத்தளங்களில் அபிநந்தனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் வைரல் ஆனார். அந்தப் பெண் அதிகாரியின் பெயர் டாக்டர் ஃபஹிரா பக்டி. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய விவகாரங்களை கையாளும் இயக்குநர் தான் ஃபஹிரா பக்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான் சிறைச்சாலையிலுள்ள குல்பூஷன் ஜாதவ் வழக்கை கையாளும் பிரதான பாகிஸ்தான் அதிகாரிகளில் ஒருவராவார்.