கமல் கோபத்திற்கு யார் காரணம் ?

0
2219
kamal-high-anger

இன்றைய பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்கள் மீது  கோபத்தின் உச்சிக்கிக்கே சென்றதாக கூறப்படுகிறது. அதை இன்றைய முன்னோட்ட வீடியோவில் காணலாம்.

இவ்வாறு கமல் கோவப்பட்டதற்கான முக்கிய காரணம் ரைசா என்று கூறப்படுகிறது. இந்த வாரம் ரைசா பிக் பாஸ்சிடம் பேசிய விதம் மிகவும் தவறாக இருந்ததை அனைவரும் அறிந்ததே

- Advertisement -

கொடுக்கப்பட்ட task-ஐ அவர் செய்யவில்லை. Mic அணிய மறுப்பு தெரிவித்தார். தூங்காமல் இருக்க முடியாது என்று பிக் பாஸ்சிடம் கூறினார். பிக் பாஸ்சின் விதிமுறைகளை மதிக்க முழுவதுமாக தவறியதோடு இது என் மொழி அல்ல, என் ஊரு அல்ல என்று வசனமெல்லாம் பேசினார்.

-விளம்பரம்-

இதை அனைத்தையும் கமல் நேரடியாக ரைசாவிடம் விசாரித்தார் என்று கூறப்படுகிறது.

அதற்கு அடுத்த நபர்கள் ஆரவ் மற்றும் சினேகன் என்று கூறப்படுகிறது. இன்று இரவு நிகழ்ச்சியில் முழுவதும் தெரியவரும், அதோடு இன்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது என்று நம்பலாம்.

Advertisement