இதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை. கவுண்டமணியின் ரீ-வைண்ட்.

0
12684
Goundamani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் நகைச்சுவை மன்னனாக பட்டைய கிளப்பியவர் நடிகர் கவுண்டமணி. இவர் காமெடியில் கொடி கட்டி பறந்தவர். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார்.
இவருடைய காமெடி இருந்தால் தான் அந்த படம் ஹிட்டாகும் என்ற நிலை இருந்தது. சினிமா உலகில் துவக்க காலங்களில் தனியாகத் தான் நகைச்சுவை நடிகராக நடித்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர், நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் கவுண்டமணி அவர்களின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பது, எப்படி பார்த்தாலும் நம்முடைய படம் டிவியில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் பேட்டியில் மட்டும் என்ன தனியா சொல்லுவது.

- Advertisement -

இதையும் பாருங்க : நேருக்கு நேர் படத்தின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை.

ரொம்ப வருஷம் கழித்து நடிக்கிறீர்கள், இந்த கதை எப்படி?

-விளம்பரம்-

நான் ரொம்ப வருஷம் கழித்து எல்லாம் நடிக்கவில்லை. ஒரு ரெண்டு வருஷம் தான் இடைவெளி. இதை பத்திரிகையாளர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு என்ற பதிமூன்று, பதினான்கு வருஷம் ராமர் வனவாசம் போல் எழுதுகிறார்கள். ஒரு நடிகன் என்றால் ரெண்டு வருஷம் இடைவெளி வருவது சாதாரணம் தான். இந்த கதையை பற்றி சொல்லணும்னா விவசாய குடும்பத்து கதை. விவசாய குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் நடக்குமோ சந்தோஷம், துக்கம்,சென்டிமென்ட், காமெடி எல்லாம் இந்த படத்தில் இருக்கும்.

Image result for goundamani latest photos

மீண்டும் நீங்கள் ரீ-என்ட்ரி காமெடி படத்தில் நடிப்பீர்கள் என்று பார்த்தால் எதிர்பார்க்காத கதையில் நடிக்கிறீர்களே?

இந்த கதையின் கான்சப்ட் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அதனால் தான் நான் நடிக்கிறேன். எனக்கு இந்த கதை பிடித்து இருக்கிறது. மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

நீங்க ஹீரோ மாதிரி படம் முழுக்க வருகிறீர்களா?

ஹீரோவோ நான் தான். மாதிரி எல்லாம் இல்லை.

உங்க ஸ்டைல தான் இப்ப எல்லா நடிகர்களும் காப்பி அடிக்கிறார்கள். என்ன சொல்லுகிறீர்கள்?

பண்ணிட்டு போட்டும். எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

வடிவேலு, சந்தானத்தை சந்தித்தால் என்ன பேசுகிறீர்கள்?

ஒன்னு சொல்லட்டுமா. எல்லா நடிகர்களும் எனக்கு நல்ல நண்பர்கள் தான். யாரிடமும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.

இதையும் பாருங்க : ‘அடியே குந்தாணி சோறு நீ போடுவியா’ என்று மஞ்சுமா மோகனை விமர்சித்த நெட்டிசன். வைரலாகும் டீவ்ட்..

சமீபத்தில் நீங்க பார்த்த படங்களில் எந்தப் படம் பிடித்திருந்தது?

எந்த படமும் பார்க்கலை. ஹாலிவுட் படம் மட்டும் தான் பார்ப்பேன். தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என எந்த மொழி படங்களையும் நான் பாக்க மாட்டேன். படம் பாக்கணும் தோன்றியது என்றால் ஹாலிவுட் படம் மட்டும் தான் பார்ப்பேன்.

தமிழ் படங்களை கூட பார்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

பார்க்கணும் அவசியம் என்ன இருக்கு. அத சொல்லுங்க நீங்க முதல்ல.
இப்படி பல கேள்விகளுக்கு அதிரடியாக பதில் கூறியிருந்தார் கவுண்டமணி.

Advertisement