நேருக்கு நேர் படத்தின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை.

0
59165
vijayajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தளபதி விஜய், தல அஜித். உலகம் முழுவதும் இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிசில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்து உள்ளார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த படத்திற்கு பிறகு 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ‘நேருக்கு நேர்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். பின் ஏதோ சில காரணங்களால் அஜீத் இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார்.

-விளம்பரம்-
Actress shares viral picture of Thala Ajith and Thalapathy Vijay in a single frame from Nerukku Ner

- Advertisement -

பின்னர் அந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இந்த நேருக்கு நேர் படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா உட்பட பலர் நடித்திருந்தார்கள். அதற்குப் பின்னால் இவர்கள் இருவரும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஜெனிஃபர் நடித்திருந்தார்.

எப்போதுமே நடிகை ஜெனிபர் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்து கொண்டே இருப்பார். அடிக்கடி தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு கொண்டே வருவார். இந்நிலையில் நடிகை ஜெனிபர் நேருக்கு நேர் படத்தில் நடித்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறிருப்பது, வாழ்க்கை என்பது தருணங்களின் தொகுப்பு. ஒரு காலத்தில் நான் தல மற்றும் தளபதியுடன் நடித்திருக்கிறேன்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B-ES8dUAgmY/

அது ராஜாவின் பார்வை படம் இல்லை. நேருக்கு நேர் படம் தான். நேருக்கு நேர் படத்தில் முதலில் தல அஜித் தான் நடித்தார். அப்போது சில காட்சிகளில் அஜீத் நடித்து இருந்தார். பின்னர் தல இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதற்கு பிறகு தான் அஜித் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். இது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. இந்த படத்திற்காக நான் பதிமூன்று முறை சிறந்த குழந்தை நட்சத்திர விருது வாங்கி உள்ளேன். ஸ்டேட் அவார்ட் உட்பட வாங்கி உள்ளேன்.

என்னை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஒரே படத்தில் மூன்று நடிகர்களுடன் ஜெனிபர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பரிட்சயமான நடிகைகளில் ஜெனிபரும் ஒருவர். இவர் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். இவர் மீண்டும் விஜய் உடன் இணைந்து நடித்த படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நடிகை ஜெனிஃபர்.

https://www.instagram.com/p/B-B78_mDLHW/

இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்கு பின்னால் இவர் பேரான்மை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று உள்ளார். சமீப காலமாகவே இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement