நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ரஜினி. ட்விட்டரில் மட்டும் இரங்கல் தெரிவித்த கமல் – இதான் காரணாம்.

0
3129
Kamal
- Advertisement -

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு உடல் நலக்குறை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமாகி இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நண்பர் என்றாலே இவரைத்தான் பெரும்பாலும் போடுவார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.கடைசியாக இவர் தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சின்னத்திரை சீரியல் நடித்திருந்தார். இப்படி இவர் கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேலாக 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 71. இவரது இறப்பிற்கு பல்வேரு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சரத் பாபுவுடன் பல படங்களில் நடித்த ரஜினி ‘இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.

சரத் பாபுவுடன் ‘ அண்ணாமலை, முள்ளும் மலரும், வேலைக்காரன்,முத்து,பாபா என்று பல படங்களில் ரஜினி நடித்து இருந்தார். அதிலும் இவர்கள் இருவர் காம்பிநேஷனில் வந்த முத்து, அண்ணாமலை படங்கள் இன்றளவும் ஒரு மாஸ்டர் பீஸ் தான். அதோடு சரத்குமாரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார் ரஜினி. ஆனால், சரத்பாபுவின் இறப்பிற்கு கமல் ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த நடிகையும் கமலின் உறவினருமான சுஹாசினி ‘சிரஞ்சீவி, கமல் ஆகியோரால் வரமுடியவில்லை .தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர். சரத்பாபுவின் இறுதி சடங்கை கமல்ஹாசன் உடன் இருப்பவர்கள் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் மேக்கப் போட்டுள்ளார். அதனுடன் வெளியே வர முடியாது என்பதால் தொலைபேசி வாயிலாக பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சரத்பாபுவின் இறப்பிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்த கமல் ‘ சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார்.அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement