2 கோடி விளம்பரத்தை மறுத்த சாய் பல்லவி.! அவர் சொன்ன காரணத்தை கேட்டால் புல்லரிக்குது.!

0
1500
Sai-pallavi
- Advertisement -

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அதற்கு 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for sai pallavi fairness cream

என் தங்கைக்கு அவளை விட நான் வெள்ளையாக இருக்கிறேன் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. அதனால் நான் அவளிடம் ‘நீ வெள்ளையாக மாற வேண்டும் என்றால் காய் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று சொன்னேன்’ ஆனால், உண்மையில் அவளுக்கு அவற்றை சாப்பிடுவது பிடிக்காது.

இதையும் படியுங்க : அரண்மனை கிளி ஜானுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா.! அவர் கணவர் இவர் தான்.! 

- Advertisement -

இருப்பினும் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக அவர் காய் மற்றும் பழங்களை சாப்பிட்டால். அப்போது தான் நான் உணர்தேன் வெள்ளை ஆக வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு பிடிக்காததை கூட செய்தால். அப்படி இருக்க நானே கிரீம் தடவினால் வெள்ளை ஆகலாம் என்று மக்களிடம் பொய் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியுமா.

அப்படி வரும் பணத்தில் நான் என்ன காண போகிறான். அந்த பணத்தை வைத்து நான் அதே சாப்பாட்டை தான் சாப்பிட போகிறேன். நம்மை சுற்றியுள்ளவர்களை நாமே ஏமாற்ற கூடாது. இது தான் நம் இந்திய நிறம் நீங்கள் அமெரிக்கா போய் அவர்களிடம் நீங்கள் ஏன் வெள்ளியாக இருக்கிறீர்கள் உங்களுக்கு புற்று நோய் வரும் என்று சொல்ல முடியுமா. அதனால் நான் அந்த அழகு சாதன பொருளில் நடிக்க மறுத்து எதோ என்னால் முடிந்த ஒரு ஆரம்பத்தை செய்தேன்.

-விளம்பரம்-

Advertisement