விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக்கிளி’ தொடரும் ரசிகர்களின் பேவரைட் தொடர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இந்த சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் மதுமிதா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `குலதெய்வம்’ சீரியலில் நடித்தவர். அதுமட்டுமல்லாமல் ஆர்த்தியின் அக்கா ஶ்ரீ பிரியாவும் சின்னத்திரை நடிகை தானாம்.. மதுமிதாவின் பர்சனல் பக்கங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
குலதெய்வம்’ சீரியலுக்கு ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விபட்டு என் அக்கா போகலாம்னு சொன்னாங்க. அப்போ சரி நாமலும் டிரை பண்ணி பார்க்கலாமேன்னு ஆடிஷன் அட்டெண்ட் பண்ணோம். நாங்க ரெண்டு பேருமே ஆடிஷன்ல செலக்ட் ஆனோம். குலதெய்வம் சீரியலில் நானும், என் அக்காவும் நடிச்சோம்.
எனது சொந்த ஊர் கேரளா. சுத்தமாக தமிழ் தெரியாது. தனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது கணவர் கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபர். எங்கள் வீட்டில் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் நடிக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளனர். என்னுடைய சீரியலில் ஆடைகளை தேர்வு செய்யும் அளவிற்கு, மாமியார் நல்ல நண்பராக இருக்கிறார்.