தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். வலிமை படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.
அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக கார்த்திகேயா காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத்குமார் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
அஜித்தின் ஏ கே 61 படம்:
அதோடு தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வேலைகள் நிறைவடைந்த பிறகு படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களிலும் பணியாற்றிய மொத்த டீமும் இந்த படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜீத் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் எந்த ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை.
ஜீன்ஸ் படம் பற்றிய தகவல்:
இந்த நிலையில் அஜீத் – ஷங்கர் கூட்டணியில் உருவாக இருந்த படம் சில காரணங்களால் நின்று விட்டது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித் – ஷங்கர் கூட்டணியில் உருவாக இருந்த படம் ஜீன்ஸ். இந்த படம் 1998 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்தது ஜீன்ஸ் படம். இந்த படத்தை அசோக் அமிர்தராஜ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், சுந்தரம் ராஜு, லக்ஷ்மி, நாசர், ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
அஜித் – சங்கர் கூட்டணியில் உருவாக இருந்த படம்:
இந்த படத்தின் பாடல்களும் கதையம்சமும் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் முதலில் இந்த படத்தில் அஜீத் தான் நடிக்க இருந்தாராம். அதற்காக மூன்று நாட்கள் வரை படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், அஜித் படத்திலிருந்து விலகினார். என்ன காரணம் என்று தெரியவில்லை. மேலும், இந்த படத்திற்கான விளம்பரங்களை பிரம்மாண்டமாக செய்யும் சங்கரின் ஜீன்ஸ் படத்திற்கான பிரமோஷன்களில் கூட அஜித் பங்கு பெறவில்லை. இது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அஜித்- சங்கர் கூட்டணியில் படம்:
அதைத்தொடர்ந்து இயக்குனர் சங்கர் எந்த ஒரு படத்திற்கும் அஜித்தை ஹீரோவாக நடிக்க அணுகவே இல்லை. ஆனால், சில வருடங்கள் கழித்து முதன் முறையாக பேஸ்புக் பக்கத்தில் இணைந்த ஷங்கர் முதலில் போட்ட பதிவே அஜித் மற்றும் அவரின் ஆரம்பம் திரைப்படம் குறித்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் கூட்டணியில் படம் வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரும் காலத்தில் இருவரும் இணைவார்களா ? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.