இந்திரா காந்திக்காக பாதயாத்திரைச் சென்ற சிவாஜி கணேசன் – எம் ஜி ஆர் போல அரசியலில் சிவாஜி ஏன் ஜொலிக்கவில்லை ?

0
520
sivaji
- Advertisement -

சிவாஜி கணேசன் 1 அக்டோபர் 1928 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார்[3] என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும்.[4] தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.

-விளம்பரம்-

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன்.சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.

- Advertisement -

கனேசன் சிவாஜி கனேசனாக மாறியது :-

சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்ற.போது தானும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், சிவாஜி கணேசன் மனதில் ஆழமாகப் பதிந்தது. நடிப்பின் மீது எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தனது ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். திராவிட கழக மாநாட்டில் 1946 ல் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது

திமுகவில் இருந்து விலகிய சிவாஜி கனேசன் :-

சிவாஜி கணேசன் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து இயற்கையாகவே திராவிட கழகத்தில் இருந்தவர். இதே கட்சியில் அன்றைய காலகட்டத்தில் முக்கிய திரை நட்சத்திரமான எம்.ஜி .ஆர்ம் இருந்தார் திராவிட கட்சியை பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று இருக்காது. சிவாஜி கணேசன் ஒரு தடவை திருப்பதி வெங்கடாஜலபதி தரிசித்து வந்தபோது. எம்ஜிஆரை பின்பற்றும் அவரது ரசிகர்கள் சிவாஜி கணேசனை கரித்து கொட்டினார்கள். இதனால் ஆத்திரமடைந்த சிவாஜி திமுகவிலிருந்து விலகினார் பின் சிவாஜி ஏற்கனவே சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக கட்சியில் இருந்து விலகி சென்ற ஈவிகேஎஸ் சம்பத்தின் தனி கட்சியில் சேர்ந்தார். அதன் பின் வந்த காலங்களில் அந்த கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்கப்பட்ட போது சிவாஜி கணேசன் காங்கிரஸ் குடும்பத்தில் ஒருவரானார்.

-விளம்பரம்-

காங்கிரஸக்காக பாதயாத்திரை :-

சிவாஜி கணேசன் 1976 ஆம் ஆண்டு நெடுந்தூரம் ஒரு பாதயாத்திரை மேற்கொண்டார் இந்த பாதயாத்திரை எதற்காக தெரியுமா. 1975 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவை மேம்படுத்துவதற்காக 20 அம்சங்களை கொண்ட திட்டம் ஒன்றை வறையறுத்தார். இந்த திட்டத்தில் கல்வி விவசாயம், பட்டியலினத்த மக்களுக்கு நீதி, பெண்களுக்கு சம உரிமை, தண்ணீர்,.தொழிலாளர்கள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்து மக்களுக்கும் வீடு போன்ற அம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சட்டமே இது. 2 இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்று சேருவதற்காகவும் விரிவாக எடுத்து சொல்வதற்காகவும் சிவாஜி கணேசன் ஐயா இந்த பாதயாத்திரை மேற்கொண்டார் அது மட்டுமில்லாமல் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அங்கு சென்று போரில் அடிபட்டவர்களுக்கு சண்டையிட்டு கொண்டிருப்பவர்கள் என அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக அங்கு சென்று கலை நிகழ்ச்சிகளும் நடத்துவராம் சிவாஜி கணேசன்.

சிவாஜி கனேசன் அரசியல் தோல்வி :-

எம்ஜிஆர்ம் சிவாஜிகணேசனும் ஆரம்ப காலகட்டங்களில் ஒரே கட்சியில் தான் இருந்தார்கள் ஆனால் எம்ஜிஆர் அரசியலில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருந்தார் ஆனால் சிவாஜி கணேசன்னோ அரசியலில் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் ஆரம்பித்த இடத்திலேயே இருந்தார்.இதற்கு காரணம் உங்களுக்கு தெரியுமா ? எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜெயலலிதா, ஜானகி இவர்களது தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. இதில் ஜெயலலிதா தலைமை தாங்கிய கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதாக இருந்தது. இந்த கூட்டணியில் உடன்பாடில்லாத சிவாஜி கணேசன் காங்கிஸ்சிலிருந்து வெளியே வந்தார். அதன் பின் அவர் ஒரு பதிய கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலத்திலேயே அந்த கட்சியை முடு விழா நடத்தினார். சிவாஜி கணேசன் திரைப்படத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து கதாபாத்திரமாகவே வாழ்பவர். ஆனால் எம்ஜிஆர் அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துடன் இணைந்து தனது தனிப்பட்ட ஹூரோஷயத்தையும் சேர்த்து காட்டுவார் ஆகையால் தான் மக்கள் எம்ஜிஆரை அரசியலிலும் ஹீரோவை பார்த்தனர்.

Advertisement