பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மறைந்த முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்கபடவுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த படத்தை விப்ரி மீடியா தயாரிக்க உள்ளது என்றும் விப்ரி ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று வித்யா பாலன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், விரைவில் பிரபல அரசியல் தலைவர் ‘இந்திரா காந்தியின்’ வாழ்க்கையை மைப்படுத்து உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க உள்ளதால் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பின்னர் தான் அந்த வாய்ப்பு கங்கனா ரணவத்திற்கு சென்றுள்ளதாம். இந்த படத்திற்காக வித்யா பாலனுக்கு 24 கோடி சம்பளம் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.