அமேஸான் பிரைமில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட படையப்பா. ரஜினி தான் காரணமா ?

0
1133
padaiyappa
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளி வந்த படம் ‘படையப்பா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

இதையும் பாருங்க : நேத்து ராட்சசன் படம் பாத்தீங்களா ? அதில் வரும் சோபியா இவர் தான். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் ரூ.50 கோடி கல்லா கட்டி வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தினை நடிகர் ரஜினியே தனது ‘அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இந்த படம் பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’-யில் வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ரஜினியின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து தெரிவித்த வண்ணமிருந்தனர். அதன் பிறகு இந்த தகவலை தெரிந்த கொண்ட ரஜினி, படத்தை டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ரிலீஸ் செய்வதற்கான ரைட்ஸை யாருக்குமே கொடுக்கவில்லையே என்று தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ‘அமேசான் ப்ரைம்’ எனும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் இருந்து ‘படையப்பா’ நீக்கப்பட்டதாக தகவல் வெளி வந்திருக்கிறது.

இதையும் பாருங்க : அட கொடுமையே, இறுதியில் உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ள ஜீவா பட நடிகை. வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

இப்போது ‘அண்ணாத்த’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். இப்படத்தினை பிரபல இயக்குநர் சிவா இயக்குகிறார். இதில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்து கொண்டிருக்கிறது பிரபல நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’.

Advertisement