சினிமா வாய்ப்பு கிடைக்கல ! அதனால் தினமும் காலையிலே ஆரம்பிச்சிடுவேன் ! நடிகர் விக்ராந்த்

0
7549
vikranth

விக்ராந்த நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வரும் வெள்ளிக்கியமை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ப்ரோமோசன் விழாவில் விக்ராந்த தன் பழைய நினைவுகள் மற்று கஷ்டங்களை சொன்னார்.
vikranthமேலும், அவர் கூறியதாவது, முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாண்டிய நாடு’ படத்தில் நடித்தேன். அதன் பின்னர் தற்போது மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வெண்ணிலா கபடி குழு படத்தைப் போல் காமெடியாகவும் சென்டிமென்ட்டாகவும் இருக்கும்.

இடையில் படவாய்ப்புகள் இல்லாததால் விரக்தியில் குண்டாய்விட்டேன், தற்போது அதனை குறைக்க பயிற்சிகள் எடுத்து வருகிறேன். அடுத்து வெண்ணிலா கபடி குழு பார்ட் – 2 வில் நடிக்கிறேன். விஷ்ணுவைத் தவிற படத்தில் முதல் பார்ட்டில் நடித்த நடிகர்கள் தான் பார்ட்-2இலும் நடிக்கின்றனர். இந்த படத்தை செல்வசேகன் இயக்குகிறார். இதற்க்காக கபடி பயிற்சி செய்து வருகிறேன் எனக் கூறினார் நடிகர் விக்ராந்த்.