அந்த ஆசை வந்தால் சினிமாவை விட்டு போய்விடுவேன்..! சாய் பல்லவி.! என்னஆசை தெரியுமா..?

0
1150
Sai-pallavi

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.இவர் தற்போது தெலுங்கு நடிகர் நாகசவுரியாவுடன் கணம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் . இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய இந்த படம் தமிழில் தியா என்று வெளியாக இருக்கிறது.

SaiPallavi

நடிகை சாய் பல்லவி 2008-ல் தாம்தூம் என்ற படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்திருந்தார் அதன் பின்னர் தனது பெற்றனூர் விருப்பபடி மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்து பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக் க துவங்கினார். அனால் சினிமாவில் நடிக்க துவங்கியதும் தம்மால் சினிமா மற்றும் டாக்டர் தொழிலை ஒரேய நேரத்தில் பார்க்க முடியாது என்று கூறி தனது பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டத்தை கூட போட்டுக் கொள்ளவில்லை சாய் பல்லவி

இந்நிலையில் நடிகர் நாகசவுரியா கணம் படத்தின் ஷூட்டிங்கின் போது சாய்பல்லவி நிறைய கோவப்படுவார் என்றும் , சில சமயங்களில் அவர் செய்யும் செயல் எரிச்சலை அளிக்கும் என்று புகார் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்த சாய் பல்லவி நான் படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் அமைதியாக தான் இருப்பேன் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டேன் . அதை சிலர் தப்பாக புரிந்து கொண்டனர்.

sai pallavi

என்மீது புகார் தெரிவித்த நாகசவுரியாவுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச நினைத்தேன் ஆனால் அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.ஏற்கனவே நான் டாக்டர் படிப்பை படித்துள்ளேன் எனவே நான் அதற்க்கு தகுந்த வேலை கிடைத்தால் நான் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் .