வனிதா போட்டியாளராக தொடருவாரா.! வெளியான செம தகவல்.!

0
6785
Vanitha
- Advertisement -

பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்று இருப்பது நேற்றய நிகழ்ச்சியில் மூலம் உறுதியானது. இது ஒருபுறம் இருக்க கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த ஓட்டிங்கில் அபிராமி தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வந்தார். மேலும், பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் அபிராமிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வந்தன.

இதையும் பாருங்க : எலிமினேஷன் இருக்கா இல்லையா.! கமல் கொடுத்த ட்விஸ்ட்.!

எனவே, இன்று அபிராமியையும் வெளியேற இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் அவுட் ஆகியுள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறைந்து வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அப்படியே வைத்திருக்க வனிதா மீண்டும் போட்டியாளராக தொடர இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சிறப்பு விருந்தினராக சென்ற பின்னர் தான் நிகழ்ச்சியில் சூடு பிடிக்க துவங்கியது. தற்போது பிரச்சனை செய்து வந்த மதுமிதாவுக்கு வெளியேறிவிட்டதால் வனிதாவை மீண்டும் தக்கவைக்க பிக் பாஸ் திட்டமீட்டிள்ளனராம்.

Advertisement