தற்போது சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை பார்த்தால் கைது செய்வார்கள் என்று வந்த தகவல் மக்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதிரியான தகவல் வந்தவுடன் சமூக வலைத்தளங்களில் பல மீமிஸ்கள் போட்டு கிண்டல்,கேலி செய்து வருகிறார்கள். ஆனால், இந்த தகவல் ஏன்? எதற்கு என்று பார்க்காமல் கலாய்தும், கிண்டல் செய்வதும் வேலையாக பார்த்து வருகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் நாம் வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும். தற்போது ஆபாச விடியாக்களை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை கூடி கொண்டு தான் போகிறது. ஆபாச வீடியோ என்றாலே ஒன்று தானே. அதற்கு ஏன் இவ்வளவு விதிமுறைகள் என்று பார்த்தால். முதலில் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஆபாச வீடியோக்களை பார்க்கும் அனைவரையும் கைது செய்வார்களா என்றால் கிடையாது.

குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை தேடுபவர்களும், வீடியோக்களை டவுன்லோட் செய்பவர்களை மட்டும் தான் கண்டிப்பாக கைது செய்வார்கள். அது ஏன்?? குழந்தை ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களை மட்டும் கைது செய்கிறார்கள் என்று பார்த்தால்…. உலகம் முழுவதும் குழந்தைகள் சம்மந்தமான ஆபாச பட வீடியோக்களை பார்க்க கூடாது என்று அரசாங்கம் தடை விதித்து உள்ளார்கள். குழந்தையும், கடவுளும் ஒன்று என்று சொல்வார்கள். ஆனால், தற்போது வளர்ந்து வரும் காலங்களில் குழந்தையை வைத்து ஆபாச வீடியோக்கள் எடுப்பதும், அதை பார்ப்பதும் நடைமுறையாக மாற்றி விட்டார்கள். மேலும், ஒன்றுமே அறியாத வயதில் குழந்தைகளை வைத்து வீடியோ எடுப்பதும், அதை பணத்திற்காக வெளியிட்டு வருகிறார்கள் சில மிருகம் ஜென்மங்கள். இதற்காக ஒரு ஆய்வும் அமெரிக்காவில் நடைபெற்றது.
அதில் குழந்தை ஆபாச வீடியோக்களை அதிகமாக எந்த நாடு பார்க்கிறது என்றால் இந்தியா தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பார்த்தால் சென்னையில் தான் அதிகமாக குழந்தை சம்மந்தமான ஆபாச வீடியோக்களை பார்க்கிறார்கள் என்று கண்டுபிடித்து உள்ளார்கள். இதனால் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் அனைவரையும் கைது செய்ய என்று உத்தரவு விட்டுள்ளார்கள். ஏனென்றால் உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒன்று தான் இந்த குழந்தை ஆபாச வீடியோக்கள். அப்படித் தடை செய்யப்பட்ட வீடியோக்கள் தற்போது அதிகமாக பார்க்கப்பட்டு வருவது என்று ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. இந்த மாதிரி பார்ப்பதினால் தான் சமீபத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா என்ற பெண்ணை கொடூரமாக பாலியல் துன்புறுத்தல் செய்து எரித்து கொலை செய்தார்கள். இந்த மாதிரி மிருகங்கள் நாட்டில் இருக்கக் கூடாது, வளரவே கூடாது என்பதற்காக தான் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதாக கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அது எப்படி குழந்தைகள் சம்பந்தபட்ட ஆபாச வீடியோக்களை பார்த்தால் மட்டும் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்த்தால் ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும். அந்த ஐபி அட்ரஸை வைத்து தான் கண்டுபிடிக்கிறார்கள். குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களை கைது செய்து 3 வருடத்தில் இருந்து ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.அதுமட்டும் இல்லாமல் ஒரு சில வக்கிர எண்ணம் கொண்ட ஜென்மங்கள் ஆபாச வீடியோக்களை பெண்களுக்கு அனுப்புவார்கள். அப்படி அவர்கள் அனுப்பும் வீடியோக்களில் குழந்தை சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இருந்தால் 155260 என்ற நம்பருக்கு கால் செய்யலாம். அதற்கு பிறகு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.





