நீச்சல் குளத்தில் போஸ்.. ரசிகர்களை வியக்கவைத்த பிரியா வாரியார்..

0
51343
priya-varrier
- Advertisement -

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

- Advertisement -

ஒரு அடார் லவ் படத்தில் இவர் நடித்த காட்சிகள் சமூக வலைதளம் மூலம் மிகவும் வைரலாக பரவி வந்தாலும், இந்த படம் வெளியானபோது மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்த படம் தோல்வி ஆனதற்கு பிரியா வாரியர் தான் காரணம் என்று இந்த படத்தை இயக்கிய ஓமர் லூலு குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பேசிய அவர், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது அனைவரும் எதைப்பற்றியும் தெரியாதவர்களாக தான் இருந்தார்கள், இதனால் எனக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், திடீரென்று இந்த படத்தின் மூலம் சிலர் பிரபலமாகிவிட்டார். அப்போதுதான் பிரச்சனை துவங்கியது. இந்த படத்தில் நடித்த பிரியா வாரியர் மிகவும் அசால்டாக இருந்தார்.

இதையும் பாருங்க : நான் செத்துட்டா இந்த உதவியை மட்டும் செய்யுங்க.. பரிதாப நிலையில் பறவை முனியம்மாவின் வேண்டுகோள்..

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தைப் பற்றிய பல்வேறு கருத்துக்களை கூறி விட்டார் இதுதான் படத்திற்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது என்று குற்றம் சாட்டி இருந்தார் ஓமர். ஆனால், தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் குறித்து எந்த ஒரு கவலையும் படாத பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். அதேபோல தனது சமூக வலைதள பக்கத்தில் பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலமாகவும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார். இப்படி புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா படத்தில் நீச்சல் உடையிலும், தண்ணி அடிக்கும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பிரியா வாரியர் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.

ஆனால், அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் காது கொடுக்காமல் இருந்து வந்தார் பிரியாவாரியர், இருப்பினும் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறாராம் அம்மணி. படவாய்ப்புகள் இல்லை என்றாலும் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியாவாரியர் அடிக்கடி பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் பிரியாவாரியர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள் இருப்பினும் வழக்கம் போல தன்னை விமர்சிக்கும் நபர்களுக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்து வருகிறார் ப்ரியா வாரியர்.

Advertisement