தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புற பாடகியாகவும் திகழ்ந்து விளங்கியவர் பறவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.பின்னர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். அது மட்டும் இல்லைங்க கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் நிகழ்ச்சியை பரவை முனியம்மா தான் தொகுத்து வழங்கியுள்ளார். இவருடைய நாட்டுப்புறப் பாடலுக்கு பல பேர் அடிமை என்று கூட சொல்லலாம்.
நாட்டுப்புற பாடல்களுக்கு நம் இந்தியாவில் மட்டும் இல்லைங்க, வெளிநாடுகளிலும் கூட ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.அதை கருதி தான் சினிமா திரை உலகமும் நாட்டுப்புற கலைகளை பல வழிகளில் கொண்டு வருகிறது. தற்போது முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கூட நாட்டுப்புற கலைகளைப் பற்றி சிறப்பாகக் கூறி இருந்தார்கள். அதில் சிறந்து விளங்கியவர் தான் நம்ப பரவை முனியம்மா. சினிமா துறையில் பல பிரபலங்கள் இவரை அம்மாவாக, பாட்டியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இவர் நாட்டுப்புறக்கலை மட்டுமல்லாமல் நகைச்சுவை, நடிப்பு என பல துறைகளில் சிறந்து விளங்கியவர்.
இதையும் பாருங்க : நான் கடவுள் படத்திற்காக அஜித் போட்ட கெட்டப்.. அப்போது வெளியான பேப்பர் விளம்பரம் இதோ..
இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றும் தன்னுடைய நாட்டுப்புற கலையை மேம்படுத்தி உள்ளார். பரவை முனியம்மா சினிமா உலகம் மட்டும் தான் நமக்கு தெரியும்.ஆனால், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களும், வேதனைகளும் நிறைந்து உள்ளது.இப்படி புகழ் ஓங்கியிருந்த பரவை முனியம்மா என்று சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் வயது முதிர்ந்த நிலையில் நோய் காரணமாக வறுமையில் வாடி இருக்கிறார். பரவை முனியம்மா ஒரு ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய வறுமையை கண்டு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆறு லட்சம் ரூபாய்யை நிதி உதவியும், குடும்பச் செலவுக்காக மாதம், மாதம் ஆறாயிரம் ரூபாயும் கொடுத்து இருந்தார். அது மட்டுமில்லாமல் மாதாந்திர மருத்துவமனை செலவிற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.பரவை முனியம்மாக்காக இப்படி பல உதவிகளைச் செய்துள்ளார்.
இவர்களுக்கு மாற்று திறனாளி மகனும் உள்ளார்.மேலும்,இது குறித்து பரவை முனியம்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நான் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருக்கிறேன். அதனால் எனக்கு வழங்கி வரும் நிதி உதவியை என்னுடைய இறப்புக்குப் பிறகு என்னுடைய மாற்றுதிறனாளி மகனுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார். இவருடைய கோரிக்கையை அரசாங்கம் ஏற்று செயல்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் பரவை முனியம்மா உடல் நலம் குறித்து ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.