ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் சமீபத்தில் வெளியாக இருந்தது.
உலகளவில் வெளியாகியுள்ள இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இந்த படம் பல மில்லியன்களை வசூலிக்கும் என்றும், இந்தியாவில் மட்டும் இந்த படம் 350 கோடிகளை வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.
இதுவரை உலகவில் இந்த படம் 8, 384 கோடிகளை வசூல் செய்துள்ளது. மேலும், இந்தியாவில் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகை ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த சையொலி என்ற பெண் அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது கிளைமாக்ஸ் காட்சியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தேம்பி தேம்பி அழுதுள்ளார். இதனால் அவருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர், மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.