சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் ட்ரைலரில் பிரபல சீரியல் நடிகையை கண்டு அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அஜித் அவர்களின் வலிமை படம் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் வலிமை படத்தில் இணைந்துள்ளது.
வலிமை படத்தை வினோத் இயக்கி இருக்கிறார். போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும், படம் ரீலிஸ் ஆகுவதற்கு முன் வலிமைப்படத்தின் அப்டேட்டுகள் சோஷியல் மீடியாவில் வருவதால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா இந்த பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள்.
வலிமை படத்தில் புகழ் :
மேலும், இன்று மாலை 6.30 மணி அளவில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது . இந்த படத்தின் ட்ரைலர் மூலம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள்அடங்கிய படமாகவே தெரிகிறது. இந்த படத்தில் குக்கு வித் கோமாளி புகழும் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும், ட்ரைலரிலும் அவர் அஜித்துடன் நடித்த காட்சி இடம்பெற்று இருக்கிறது.
வலிமை படத்தில் சைத்ரா ரெட்டி :
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்துள்ளார். புகழை போல தான் வலிமை படத்தில் நடிக்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளாமல் இந்த படத்தின் ட்ரைலர் வெளியான பின்னர் இதுகுறித்து அவர் பதிவிட்டு ‘இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
யாரடி நீ மோகினி பெற்று தந்த பிரபலம் :
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர். கொடூரமான வில்லியாக இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இவருடைய சொந்த ஊர் பெங்களூர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது.
கயல் சீரியல் :
திருமணத்திற்குப் பிறகும் இவர் சீரியலில் அதிக அழகுடனும், பொலிவுடனும் நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த பிறகு தற்போது இவர் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்த்த இவரை பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க புதிதாக இருக்கிறது.