சமீப காலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. நடிகை நட்சத்திரா பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். ஆனால், சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இவர் முதன் முதலில் சினிமாவில் தான் அறிமுகமானார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் என்பவர் இயக்கிய ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் நட்சத்திரா நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் நட்சத்திரா சீரியல் பக்கம் திரும்பினார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நட்சத்திரா நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
நட்சத்திரா நடிக்கும் சீரியல்:
அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த சீரியல் மட்டுமில்லாமல் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இதனைத் தொடர்ந்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நட்சத்திரா நடிக்க இருந்த சீரியல் சம்பள பிரச்சனையால் நின்று விட்டதான தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
நட்சத்திரா நடிக்க இருந்த சீரியல்:
யாரடி நீ மோகினி சீரியல் முடிந்தவுடன் நட்சத்திராவை ஹீரோயினாக கமிட் செய்து அடுத்த சீரியலை தொடங்க ஜீ தமிழ் சேனல் முடிவு செய்திருந்தது. தெய்வம் தந்த பூவே என்று அந்த தொடருக்கு பெயர் வைத்திருந்தார்கள். இந்த தொடரில் நடிக்க நட்சத்திராவிடம் கேட்டதற்கு அவரும் சம்மதம் என்று சொல்லி ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த தொடருக்கு ஹீரோ எல்லாம் உறுதி செய்யப்பட்டது. பின் ஷூட்டிங் கிளம்பலாம் என்று தேதியை முடிவு செய்து நட்சத்திராவிற்கு சேனல் தரப்பிலிருந்து போன் செய்து இருக்கிறார்கள்.
சீரியலில் நட்சத்திரா நடிக்க மறுத்த காரணம்:
அப்போது நட்சத்திரா சொன்னது பயங்கர ஷாக் ஆகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிக்க நீங்கள் தருவதாக சொன்ன சம்பளம் எனக்கு ரொம்ப குறைவாக இருக்கிறது என்று நட்சத்திரா கூறினார். இது சற்றும் சேனல் மற்றும் தயாரிப்பு தரப்பில் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அவர்கள் நட்சத்திராவின் நோக்கத்தை புரிந்து கொண்டு கூடுதலாக சம்பளம் நாங்கள் தருகிறோம் என்று சம்மதித்து இருந்தார்கள். இருந்தும் நட்சத்திரா சூட்டிங்கிற்கு கிளம்ப தயாராக இல்லை. இதனால் கடுப்பான சேனல், எதுவாக இருந்தாலும் ஓபன் ஆக சொல்லிவிடுங்கள். என்ன பிரச்சினை? என்று கேட்டிருக்கிறார்.
சேனல் மனம் உடைய காரணம்:
அதற்கு நட்சத்திரா கூறியிருப்பது, யாரடி நீ மோகினி சீரியலில் வாங்கிய சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் தருவதாக இன்னொரு சேனலில் பேசியிருக்கிறார்கள். அந்த சீரியலில் ஹீரோயினியாக நடிக்க கூப்பிடுகிறார்கள். அவர்கள் தரேன் சொன்ன சம்பளத்தை நீங்கள் தர முடியுமா? என்று நட்சத்திரா கேட்டிருக்கிறார். இதைக் கேட்டவுடன் சேனலுக்கு தூக்கிவாரிபோட்டது. வளர்த்த கடா மார்பில் முட்டுது என்ற பழமொழிக்கேற்ப வளர்த்து விட்ட எங்ககிட்டயே நல்ல பிசினஸ் டீல் பண்றீங்களே என்று சேனல் தரப்பில் கூறியிருந்தார்கள். பின் சரி, பரவாயில்லை நீங்கள் அங்கேயே போய் நடியுங்கள் என்று சொல்லி அந்த சீரியலில் நடிக்க வேறொரு புதிய ஹீரோயினை கமிட் செய்திருக்கிறார்கள்.