அவசர அவசரமாக நடந்த நக்ஸத்ராவின் திருமணம், வெளியான புகைப்படம் – திடீர் திருமணத்திற்கு இப்படி ஒரு காரணமா ?

0
495
Nakshatra
- Advertisement -

சீரியல் நடிகை நக்ஸத்ரா திடீர் திருமணம் முடித்த நிலையில் தற்போது அவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சீரியல் நடிகை நட்சத்திர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த தொடர் நிறைவடைந்த நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் தொடரில் நடித்து வருகிறார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் கதைப்படி நட்சத்திராவுக்கு திருமண எபிசோடு ஷூட் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

தற்போது உண்மையிலேயே இவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நக்ஸத்ரா குறித்து பேசிய அவரின் நெருங்கிய தோழியும், சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி நக்ஸத்ரா குறித்து பேசிய போது ‘நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது.

- Advertisement -

இதையும் பாருங்க : லவ் லெட்டர் எழுதி வீட்டில் மாட்டிக்கொண்டு செம அடி வாங்கியுள்ள சாய் பல்லவி – அதுவும் எந்த வயதில் பாருங்க.

நக்ஸத்ரா குறித்து ஸ்ரீநிதி ஏற்படுத்திய சர்ச்சை :

நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றும் அவர் கூறி இருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த நக்ஸத்ரா ‘நான் லவ் பண்ண பையன் பேமிலி என்ன பிடிச்சி வச்சி இருக்காங்கன்னு சொல்றது எல்லாம் பொய்.

-விளம்பரம்-

ஸ்ரீநிதி குறித்து நக்ஸத்ரா :

அவ எதோ மன அழுத்தத்தில் இருக்கிறார். அவள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். அவள் என்மீது உள்ள அக்கரையில் அப்படி செய்துகொண்டு இருக்கிறாள். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன்’ என்று கூறி இருந்தார். ஆனால், தனது திருமணம் குறித்து எந்த தகவலையும் அவர் கூறவில்லை. இப்படி ஒரு நிலையில் நக்ஸத்ராவிற்கும் விஸ்வா என்பவருக்கும் திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

தாத்தாவின் ஆசையால் நடந்த திருமணம் :

நட்சத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பள்ளிப் படிப்பு வரை நட்சத்திரா அந்தத் தாத்தாவின் வீட்டிலிருந்தே வளர்ந்தவர். அந்தத் தாத்தாவின் ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட வேண்டும் என்பதுதான். அதனால தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா – விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாக கூறப்படுகிறது.

யார் இந்த விஸ்வா :

நக்ஸத்ராவை திருமணம் செய்துள்ள விஸ்வா, ஆழ்வார் திருநகர் பகுதியில் டாட்டூ கடை வைத்திருக்கிறார் என்றும் ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறியுள்ளனர். அவரது சகோதரி கூட சீரியல் நடிகை தானாம். அதுமட்டுமல்லாமல் விஷ்வாவின் குடும்பத்துக்கு சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடன் நல்ல நட்பு உண்டாம்.

விஜய் குடும்பத்துடன் நெருக்கம் :

அந்தத் தொடர்பில்தான் சேவியர் பிரிட்டோ ஜீ தமிழ் சேனலில் தயாரிக்கும் சீரியல்களின் தயாரிப்பு மேற்பார்வையை விஷ்வாவும் அவரின் சகோதரியும் கவனித்து வருகிறாராம். அதே போல இருவீட்டார் சம்மதத்துடன் விஷ்வா மற்றும் நக்ஷத்திரா இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு இருக்கின்றனர்.மேலும், திருமணம் குறித்து இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அறிவிப்பதாக நக்ஷத்திராவும் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணமே முடிந்து இருக்கிறது.

Advertisement