யாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விளகினாரா? இல்லை நீக்கப்பட்டாரா ? நடிகை யமுனா விளக்கம்.

0
13253
yaarade-nee-mohini

பரத் நடிப்பில் வெளிவந்த வெயில் படத்தில் பரத்தின் தங்கையாக அறிமுகமானவர் யமுனா சின்னதுரை. இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், இவர் பெரிய அளவு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை. இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டது ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தான். பொதுவாகவே பேய் சீரியல் என்றால் பயமுறுத்தும் கதாபாத்திரம் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வரும். ஆனால், முதன் முதலாக பேய் என்றால் நல்ல பேய் என்று பெயர் வாங்கியவர் நடிகை யமுனா. யாரடி நீ மோகினி சீரியலில் சித்ரா என்ற பேய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை யமுனா. ஆனால், இப்போது சீரியலில் போய் என்ற கதாபாத்திரமே வருவதில்லை.

Image result for yaaradi nee mohini serial yamuna"

- Advertisement -

ஒரே ரொமான்ஸ், காமெடி காட்சிகள் தான் போய்க் கொண்டிருக்கின்றது. சமீப காலமாகவே நடிகை யமுனா அவர்கள் யாரடி நீ மோகினி சீரியலில் வருவது இல்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது நடிகை யமுனா கூறியது, என்னிடம் அனைவரும் ஏன் நீங்க இப்போதெல்லாம் சீரியலில் வருவதில்லை. உங்களை நாங்கள் சீரியலில் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என்று பல பேர் கேட்டார்கள். உண்மையை சொல்லப் போனால் எனக்கே ஏன் என்று தெரியவில்லை. இந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாரும் என்னை சீரியலில் நடிக்க சொல்வது எனக்கு சந்தோசமாக இருக்கு.

அதுமட்டுமில்லாம சீரியலில் என்னுடைய கேரக்டர் கொண்டு வராதது எனக்கே கோபம் வரும். இதை நான் இயக்குனர் இடம் போன் செய்து கேட்டேன். எனக்கு வந்த கதையை தான் நான் இயக்க முடியும் என்றும், எனக்கு எதுவும் தெரியாது என்றும் சொன்னார். கதை எழுதுபவர்கள் கையில் தான் உள்ளது. நான் எப்ப தேவைப்படும் என்று யோசி எழுதுவாங்க. சரி அவர்களுக்கு எப்ப தோணுதோ அப்ப கூப்பிடுவாங்க பாத்துக்கலாம் என்று நம்ம மனசு தேத்திக்க வேண்டியது தான். பேய் சீரியல் மூலமாக எனக்கு இந்த அளவுக்கு பெயர் கிடைக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு.

-விளம்பரம்-

ஆனால், என்னால் அந்த சீரியலில் தொடர்ந்து போக முடியாது தான் கஷ்டமாக இருக்கு என்று கூறினார். ;தற்போது சேசிங் படத்தில் நடித்து வருகிறார். வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சேஸிங். இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. அதுவும் ஆக்சன் ஹீரோயினியாக வரலட்சுமி இந்த படத்தில் களமிறங்கியிருக்கிறார். நடிகை யமுனா தற்போது இந்த சேஸிங் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்கள்.

Advertisement