பாலியில் தொழில் கேரக்டரா வந்துட்டு இருந்தது, அனால் இந்த படம் – ஜிகிர்தண்டா அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை

0
479
- Advertisement -

இதற்காகத்தான் நான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிக்க ஒற்றுக்கொண்டேன் என்று நடிகை யமுனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகியிருந்த வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் சின்னத்திரை நடிகை யமுனா நடித்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் பல சீரியலில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு பின்பு இவர் சில சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டியில் யமுனா, இந்த படத்திற்காக நான் ஆடிஷன் போயிருந்தேன்.

- Advertisement -

யமுனா பேட்டி:

அப்போது யார் படம்? என்ன பேனர்? என்றெல்லாம் எதுவுமே தெரியாது. சினிமாவுக்காக ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆடிஷன் போவதற்கு முன்னாடியே கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது என்று எதுவுமே கேட்கவில்லை. அவங்க ஆடிஷனுக்கு கூப்பிட்டதுமே, உங்களுடைய ப்ராஜெக்ட்ஸ் பார்த்திருக்கிறோம். உங்க ஆக்டிங் நல்லா இருக்கு. அதனால்தான் உங்களை செலக்ட் செய்திருக்கிறோம் என்று சொல்லி ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. பின் எமோஷனலாக டயலாக் கொடுத்து பேச சொன்னார்கள். நான் நடிச்சும் காட்டி முதல் டேக்கிலேயே ஓகே சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு தான் இயக்குனர் யார் என்று கேட்டேன். கார்த்திக் சுப்புராஜ் சார் என்று சொல்லவும் ஓகேன்னு சொல்லிவிட்டேன்.

படம் அனுபவம்:

அடுத்ததாக ஹீரோ யார் என்று கேட்டேன். லாரன்ஸ் சார் என்று சொல்லியும் தேதி மட்டும் சொல்லுங்க வந்து விடுகிறேன் என்று சொன்னேன். அப்போ கூட என்னுடைய கதாபாத்திரம் நான் எதுவும் கேட்கவில்லை. ஸ்கிரீனில் ஒரு இடத்தில் நாம் வந்தால் போதும் என்று நினைத்தேன். இந்த படத்திற்கு மூன்று நாள் சூட்டிங் போயிருந்தேன். ஒரு நாள் மதுரை, இன்னொரு நாள் காரைக்குடி, கடைசியில் சென்னை. பெரியபடத்தில் ஒரு நாள் நாம சூட் போனாலே ஒரு நிமிஷம் ஸ்கிரீனில் நமக்கான ஸ்பேஸ் இருக்கும். மூன்று நாள் நடித்து இருக்கிறோம். கண்டிப்பாக இருக்கும் என்று எனக்கு புரிந்தது. அதுவும் லாரன்ஸ் அவர்கள் காம்பினேஷனில் வரும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

-விளம்பரம்-

படத்தில் நடிக்க காரணம்:

நாம் சீரியலில் பண்ணும் போது என்ன கதாபாத்திரம் பண்ணுகிறோமோ அதுதான் மக்கள் மனதில் பதியும். நெகட்டிவ் ஆக பண்ணினால் என்னை பார்க்கும் போது அவங்களுக்கு கோபம் தான் வரும். பாசிட்டிவ் கதாபாத்திரம் பண்ணால் அன்பு வரும். ஏற்கனவே பாலியல் தொழில் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன் பின் வந்த எல்லா கதாபாத்திரமும் அதே மாதிரி இருந்தது. அதனால் இந்த கதாபாத்திரம் இனி பண்ணவே வேண்டாம் என்று முடிவு பண்ணி விட்டேன். இந்த படத்தில் இந்த கதாபாத்திரம் சொல்லவும் என் சீன்ஸ் எப்படி இருக்கும் என்று கேட்டேன். அப்போது நீங்க அந்த ரூமில் இருந்து இருக்கிறீங்க மாதிரி தான் காட்டுவோம் என்று சொன்னார்கள். அது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது . அந்த குழந்தையை வைத்து மிரட்டுவாங்க என்று சொல்லவும் என் குழந்தைக்காக கதிர் அழும்போது இந்தக் கேரக்டர் மொத்தமா உடைஞ்சிடும்னு தோணுச்சு.

ராகவா லாரன்ஸ் குறித்து சொன்னது:

அதனால்தான் இந்த கதாபாத்திரத்துக்கு ஓகே சொன்னேன். மேலும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது நமக்கான ஸ்பேஸ் கொடுப்பாங்களா என்ற பயம் எனக்கு எப்பவும் இருக்கும். சாரிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். நீங்க படத்தில் காஞ்சனா பண்ணீங்க, நான் சீரியலில் பேயாக நடித்தேன் என்று சொல்லவும் இப்பதான் ஞாபகம் வருது யாரடி நீ மோகினி சீரியல் நீங்க தானே பேயாக பண்ணியிருந்தீங்க. கேள்விப்பட்டிருக்கேன். அது கூட நீங்க பாக்குறதுக்கு சீதா மேம் மாதிரி இருக்கீங்க. உங்க கண்ணு முக்கெல்லாம் ஷார்ப்பாக இருக்கு. உங்க பெர்ஃபார்மன்ஸை கண்ணில் கொடுத்தீங்கன்னா இன்னும் சூப்பராக இருக்கும். இது சூப்பர் சீன் உங்களால் எவ்வளவு முடியுமோ அதை பண்ணுங்க. என்னைப் பற்றி யோசிக்காதீங்க என்று ராகவா சார் சொன்னார் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement