பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனியின் கேர்ள் பிரண்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 45 நாட்களை கடந்து இருக்கிறது. நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது.
இதனால் மற்ற போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும், சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது. அதோடு ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ், பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது. இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள்.
பிரதீப் வெளியேற்றம்:
ஆனால், கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள். இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர நேர நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும்.
நெட்டிசன்கள் வருத்தம்:
இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டு விட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. பிரதீப் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியும் அவரை குறித்து தான் போட்டியாளர்கள் விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நிகழ்ச்சியை விட்டு வெளியேற பிறகு பிரதீப் தன்னுடைய நண்பர் கவியுடன் இணைந்து பேட்டி அளித்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு பின் பிரதீப்:
மேலும், பிக் பாஸ் டைட்டில் வின்னராக பிரதீப் ஆயிருந்தால் கூட இந்த அளவிற்கு பிரபலம் கிடைத்திருக்கிறது. தற்போது ரெட் கார்ட் கொடுத்து வெளியே வந்த பிறகு தான் பிரதீப்பிற்கு ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு சில பட வாய்ப்புகளும் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ரெட் கார்டுக்கு பின்னர் பிரதீப் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேறக்கவில்லை, வெறும் ட்விட்டரில் மட்டும் பதிவுகளை போட்டு வருகிறார்.
சுரேஷ் லைவில் பிரதீப் :
இப்படி ஒரு நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தீயின் யூடுயூப் சேனலில் பிரதீப் தோன்றி இருக்கிறார். சமீபத்தில் மாயா, வெளியில் போனால் பிரதீப் ரசிகர்கள் என்ன செய்வார்களோ என்று பயமாக இருக்கிறது. வெளியில் சென்றதும் பிரதீப்பை சந்தித்து எல்லா உண்மையையும் சொல்லிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசிகொண்டு இருக்கும் போது பிரதீப் கேமரா முன் தோன்றி இருக்கிறார்.