சிவகார்த்திகேயன் கொடுத்த கிப்ட, செமயா பண்ணிடலாம்டானு கூறியுள்ள விஜய். யோகி பாபு லேட்டஸ்ட் போன் பேட்டி.

0
10524
YogiBabu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is yogi-1.jpg

சமீபத்தில் யோகி பாபுவிற்கு திருமணம் என்று வதந்திகள் பரவியது. ஆனால், அது பொய் என்றும் கூறி இருந்தார் யோகி பாபு. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வழியாக யோகி பாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.சென்னையில் உள்ள யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

இதையும் பாருங்க : டப்பிங் முதல் விபத்து வரை. அஜித்துக்கும் விக்ரமுக்கும் உள்ள ஒற்றுமை. பலரும் அறிந்திடாத ஒன்று.

- Advertisement -

இந்த திருமணத்தில்திரைபிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வைத்து சினிமா பிரபலங்கள் அனைவரையும் அழைக்கலாம் என்று யோகி பாபு பத்திரிக்கை எல்லாம் கூட வைத்திருந்தார் ஆனால் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நடிகை யோகி பாபு அவர்கள் நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கியுள்ளார். இதனைச் சிலருக்கு தன் கையாலேயே கொடுத்துள்ளார். யோகி பாபு அரிசி கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது. சமீபத்தில் யோகி பாபு பிரபல ஊடகத்திற்கு செல் போன் மூலம் பேட்டி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த பேட்டியில் பேசியுள்ள யோகி பாபு, திருமணத்திற்குப் பின்னர் தனது மனைவிக்கு தான் ஒரு புடவை வாங்கிக் கொடுத்ததாகவும் அதேபோல தனது மனைவி தனக்கு இரண்டு சட்டையை முதல் பரிசாக கொடுத்ததாகவும் ஆனால் அந்த சட்டை சொல்லாமலே படத்தில் வரும் லிவிங்ஸ்டன் அணியும் சட்டை போல இருந்தது என்றும் கேலியாக கூறியுள்ளார் யோகிபாபு மேலும் சிவகார்த்திகேயன் தனது மனைவி என்னுடைய மனைவியை சந்திக்க வேண்டும் என்று கூறியதாகவும் இதனால் கோவாவில் இரண்டு குடும்பமும் சந்தித்து போது சிவகார்த்திகேயன் திடீரென்று தனக்கு தங்கச் செயினை போட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : சிறையில் மாஸ்க் தயாரிக்கும் நண்பன் பட நடிகர். யார் தெரியுமா ?

லும் தனக்கு திருமணம் ஆனது குறித்து பல நடிகர் நடிகைகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தான் குறிப்பாக ஜெயம் ரவி விஜய் அஜித் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் என்று அனைவருமே தனக்கு திருமணம் ஆனது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாக கூறிய யோகிபாபு, விஜய்யை சந்தித்து பத்திரிக்கை வைக்க சென்றபோது நல்லா பெருசா பண்ணலாம்டா என்று கூறியதாக யோகிபாபு கூறியுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்தும் தள்ளிப் போய்விட்டது. விரைவில் இவை எல்லாம் அடங்கிய பின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் யோகி பாபு.

Advertisement