நானே அடிச்சி புடிச்சி ஒரு கல்யாணத்த பண்ணி இருக்கேன். புலம்பி தள்ளிய யோகி பாபு. வீடியோ இதோ.

0
24210
YogiBabu

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பிறகு காமெடி நடிகர்களில் அதிக புகழையும்,பிரபலத்தையும் குறுகிய காலத்திலேயே சம்பாதித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.மேலும், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு. யோகி பாபுவிற்கு கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : இப்படி செஞ்சா எப்படி வேலைக்கு போறது-குழந்தையின் குயூட் புகைப்படத்தை பதிவிட்ட அமித்.

- Advertisement -

இந்த நிலையில் திருமணமான பெண் ஒருவர் டிக் டாக்கில் தொடர்ந்து யோகி பாபு புகைப்படத்தை வைத்து டிக் செய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த நபர், தான் ஒரு நடிகை என்றும் 16 வயது முதல் சினிமாவில் இருந்து வருதாகவும், தான் ஒரு தவிர யோகி பாபுவின் ரசிகை என்றும் கூறியுள்ளார். மேலும், பலரும் என்னுடைய கணவர் திட்டவில்லையா என்று கேட்கிறார்கள். நான் மற்றவர்களுடன் வீடியோ செய்தால் தானே திட்ட வேண்டும் எனக்கு பிடித்தவருடன் வீடியோ செய்தால் ஏன் திட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவரது டிக் டாக்கில் யோகி பாபுவின் புகைப்படத்தை வைத்து பல்வேறு விடீயோக்களை வெளியிட்டுள்ளார். இந்த செய்தியை நமது வலைதளத்தில் தான் பதிவிட்டிருந்தோம். அதனை அந்த பெண்ணே மீண்டும் தனது டிக் டாக் பக்கத்தில் கூட பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீடியோக்கள் குறித்து யோகி பாபுவின் பார்வைக்கு செல்ல இதுகுறித்து யோகி பாபு பாலிமர் செய்திக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அந்த நடிகையை இதுவரை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. இது மாதிரி பல பேர் செய்வார்கள். ஆனால், உண்மையில் அவர் என்னுடைய ரசிகையாக இருந்தாலும் இந்த அளவிற்கு எல்லாம் செய்ய தேவையில்லை.

-விளம்பரம்-

அவரின் குடும்பத்தார்க்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள். நான் அவரின் ஒரு இரண்டு விடியோவை பார்த்தேன். ஆனால், என்னை பற்றி வெளியில் தப்பாக நினைத்து கொள்ள போகிறார்கள். அதுவும் அவர் லவ் பெயில் அளவுக்கு எல்லாம் பேசி இருக்கிறார். நானே அடிச்சி புடிச்சி ஒரு கல்யாணத்த பண்ணி இருக்கேன். ஆனால், எப்படிடா இவன் கல்யாணம் பண்ணான் என்ற அளவுக்கு இருக்கிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு சில வீடியோ பார்த்தேன் அதில் நீ கருப்பா இருந்தாலும் தப்பில்ல, சிவப்பாக இருந்தாலும் தப்பில்ல என்றெல்லாம் வசனம் பேசி இருக்கார். அதை பார்க்கும் போது என்னம்மா இத உன் வீட்டுகாரன் பாத்தா தப்பில்ல என்று தான் கேட்க தொன்றுகிறது என்று கூறியுள்ளார் யோகி பாபு.

Advertisement