நான் எதிர்பார்த்த மாதிரி பொண்ணு கெடச்சிடுச்சி, நானும் மாப்பிள்ளை ஆகிட்டேன்- யோகி பாபு குஷி.

0
3242

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.

yogi-babu

அதே போல தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவதும் இவர் தான் என்று கூறப்படுகிறது. நடிகர் யோகிபாபு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சொல்லப்போனால் இந்த இரண்டு படத்திலும் நயன்தாராவை விட இவருக்கு தான் காட்சிகள் அதிகமாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

இதையும் பாருங்க : 40 ஆண்டுகளாக நாடக டீச்சர், 60 வயதில் முதல் வாய்ப்பு. சைக்கோ பட டீச்சரின் அறியாத பக்கம்.

- Advertisement -

சமீபத்தில் யோகி பாபுவிற்கு திருமணம் என்று வதந்திகள் பரவியது. ஆனால், அது பொய் என்றும் கூறி இருந்தார் யோகி பாபு. தற்போது ஒரு வழியாக யோகி பாபுவிற்கு உண்மையில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு தொலைபேசி மூலமாக யோகி பாபு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், இதற்குமேல் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது. இந்த சமூக ஊடகங்களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இவர்களை திருமணம் செய்து கொள்ள போகிறாராம், அவர்களை திருமணம் செய்து கொள்ள போகிறாராம். என்று திரிஷா விலிருந்து நயன்தாரா என்கூட கல்யாணம் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Yogi-babu

எதற்கு இந்த பிரச்சனை எங்கள் வீட்டிலேயே ஏங்கே எனக்கு கால்கட்டு போடவில்லை என்றால் சாமியாரா போய்விடுவேனோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்து விட்டேன். வீட்டில் எல்லோரும் சேர்ந்து பார்த்த பெண் தான், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எனக்கு மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கிற அனைவருக்கும் பிடித்துவிட்டது. எனக்கு மனைவியாக வரப் போகிறவர்கள் என்னை மட்டுமில்லாமல் அம்மா தங்கை என்று என் மொத்த குடும்பத்தினரும் அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். அப்படியோரு குணத்திலேயே ஒரு பெண் கிடைத்து விட்டார்கள்,நானும் மாப்பிள்ளை ஆகிவிட்டேன்’ என்று மிகவும் குஷியாக கூறியுள்ளார் யோகி.

-விளம்பரம்-

மேலும், யோகி பாபு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் பெயர் பார்கவி என்று தெரியவந்துள்ளது மேலும், இவர் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதற்க்கு முக்கிய காரணமே யோகி பாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் தான். தற்போது யோகி பாபு வெளியூரில் ஷூட்டிங்கில் இருக்கிறார், அவர் ஷூடிங் முடித்து வந்ததும் அவரின் திருமண தேதி அறிவிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement