விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகிகள் பற்றும் மற்ற நடிகர்களையும் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா அல்லது நயன்தாராவை விஜய்க்கு ஜோடியாக்க டிஸ்கஷன் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை நடத்தியதோடு படத்தில் பணியாற்றும் சில கலைஞர்கள் பெயரை வெளியிட்டது படக்குழு.
இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்,மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.அதே போல யோகி பாபவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார். அதே போல விஜயுடன் மெர்சல், சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.