நான் காத்திருந்தது தெரிந்தும் கோவில் நிர்வாகம் அலட்சியம் – யோகி பாபு குற்றச்சாட்டு.

0
862
yogi
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

-விளம்பரம்-

யோகிபாபு திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் இவரின் கால்சீட் கிடைக்காதா? என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். அந்த அளவிற்கு யோகி பாபு பிஸியான நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். பிஸியான இவர் சில ஆண்டாகவே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளை குவித்ததோட இந்த ஆண்டின் டாப் 10 படங்களில் ஒன்றாக வந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு

- Advertisement -

முன்னணி காமெடி நடிகர் :

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கிறார். படத்தை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் இணைந்து ‘எ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறார்கள். இவானா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு நேற்று வெளியாகி இருந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன்ஸ் நடித்திருந்த ”ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புத்தாண்டு :

2022ஆம் ஆண்டு முடிந்து தற்போது 2023ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் உலக மக்கள் அனைவரும் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் பலரும் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் காமெடி நடிகரான யோகி பாபு திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

-விளம்பரம்-

ஒரு மணிநேரம் காத்திருப்பு :

இந்த நிலையில் திருத்தணி கோவிலில் விஐபிகள் செல்லும் பாதையில் செல்ல யோகி பாபு கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தார். யோகி பாபு காத்திருக்கும் தகவல் கோவில் நிர்வாகத்திற்கும் தெரிந்தும் கூட இவரை அனுமதிக்காத காரணத்தினால், பக்தர்கள் இறங்கும் இடத்தின் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனால் இவரை கண்டவுடன் அங்கிருந்த ரசிகர்கள் யோகிபாபுவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியும்,யோகி பாபுவுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Advertisement